செய்தி: நிரல்
மே 31 20:29

யாழ்ப்பாணத்தில் அதிகரிக்கும் கொவிட்-19. மரணிப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் உயர்வு

(யாழ்ப்பாணம், ஈழம்) தமிழர் தாயகமான வட மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் கொவிட் - 19 நோய் தொற்றாளர்கள் தினமும் அடையாளம் காணப்படும் நிலையில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அடையாளம் காணப்படும் தொற்றாளர்களின் எண்ணிக்கை தினமும் உயர்வடைவதுடன் கொரோனாவில் மரணமடைபவர்களின் தொகையும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் இலங்கை அரசாங்கத்தினால் யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கு அனுப்பிவைக்கப்பட்ட கொவிட் தடுப்பூசிகளை பொது மக்களுக்கு செலுத்தும் பணிகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆரம்பிக்கப்பட்ட நிலையில் அன்றைய தினமே 2948 தடுப்பூசிகள் பொது மக்களுக்குச் செலுத்தப்பட்டதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஏ. கேதிஸ்வரன் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
மே 31 15:32

கொரோனா பரவலைத் தடுக்க அரசாங்கம் தவறியுள்ளது- ராஜபக்சவுக்கு ஆதரவான பௌத்த தேரர்கள் குற்றச்சாட்டு

(வவுனியா, ஈழம்) இலங்கைத் தீவில் வேகமாகப் பரவி வரும் கொரோனாவின் மூன்றாவது அலையை கட்டுப்படுத்துவதற்கு சுகாதாரத் துறையினர் வழங்கிய அறிவுறுத்தல்களை அலட்சியம் செய்ததுடன் உரிய நேரத்தில் தேவையான நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் எடுக்கத் தவறியதால் நாடளாவிய ரீதியில் தினமும் ஆயிரக்கணக்கான புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுவதுடன் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் நாளாந்தம் அதிகரிப்பதாக பௌத்த தேரர்களான முருத்தெட்டுவ ஆனந்த தேரர் மற்றும் அக்மீமன தயாரத்ன தேரர் ஆகியோர் குற்றம் சாட்டியுள்ளனர்.
மே 29 19:48

கிளிநொச்சி, மன்னார் மாவட்டங்களில் விவசாயிகள், மீனவர் பாதிப்பு

(கிளிநொச்சி, ஈழம்) வட மாகாணத்தின் கிளிநொச்சி மற்றும் மன்னார் மாவட்டங்களில் கடந்த திங்கள் மற்றும் செவ்வாய் ஆகிய தினங்களில் ஏற்பட்ட யாஸ் புயல் தாக்கத்தினால் தோட்டச் செய்கையாளர்களும் மீனவர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கிளிநொச்சி மாவட்டத்தில் விவசாயிகளும் மன்னார் மாவட்டத்தில் மீனவர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக அம் மாவட்டங்களின் செயலக அதிகாரிகள் கூர்மைச் செய்தித் தளத்திற்கு தெரிவித்தனர்.
மே 28 20:28

போட் சிற்றிச் சட்டமூலத்துக்கு சபாநாயகர் கைச்சாத்திட்டார்

(வவுனியா, ஈழம்) கொழும்பு போட் சிற்றி என அழைக்கப்படும் கொழும்பு சர்வதேச வர்த்தக நிதி நகரத்தைக் கையாள்வதற்காக இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்ட மூலத்துக்கு சபாநாயகர் மகிந்த யாப்பா அபயவர்த்தன இன்று கையொப்பமிட்டுள்ளார். நேற்று வியாழக்கிழமையில் இருந்து சட்டமூலம் நடைமுறைக்கு வருமென அரசாங்கத் தகவல்கள் கூறுகின்றன. சட்டமூலம் கைச்சாத்திடப்பட்டபோது சீனத் தூதரக அதிகாரிகள் சிலரும் சமுகளித்திருந்ததாகக் கொழும்பு உயர்மட்ட அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. ஏற்கனவே சீனச் சட்ட அறிஞர்குழு ஒன்று கொழும்புக்கு வருகை தந்துள்ள நிலையில் இன்று சட்டமூலத்துக்குச் சபாநாயகர் கைச்சாத்திட்டுள்ளார்.
மே 27 19:12

றிஷாத் பதியூதீன் விடுவிக்கப்பட வேண்டுமென வலியுறுத்தி கண்டனப் பிரேரணைகள்

(வவுனியா, ஈழம்) இலங்கையின் முன்னாள் அமைச்சர் றிஷாத் பதியூதீன் மற்றும் அவரின் சகோதரர் றியாஜ் பதியூதீன் ஆகியோர் பயங்கரவாதத் தடைச்சட்டத்தில் கைதாகி கடந்த திங்கள்கிழமை 24ஆம் திகதியுடன் ஒரு மாதம் கழிந்துள்ள நிலையில் இலங்கையில் உள்ள பல உள்ளூராட்சி சபைகளில் றிஷாத் பதியூதீனின் கைது தொடர்பில் பல கண்டனப்பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இலங்கை பயங்கரவாதத் தடுப்பு பொலிஸ் பிரிவினரால் றிஷாத் பதியூதீனும் அவருடை சகோதரர் றியாஜ் பதியூதீனும் உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கடந்த ஏப்பிரல் 24ஆம் திகதி அதிகாலை கொழும்பில் உள்ள அவர்களின் வீடுகளில் வைத்துக் கைது செய்யப்பட்டு தற்பொழுது தொடர்சியான விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.
மே 26 20:38

மன்னார், கிளிநொச்சியில் இரண்டு நாட்களில் இரு சடலங்கள் மீட்பு

(கிளிநொச்சி, ஈழம்) வட மாகாணத்தில் மன்னார் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் கடந்த இரண்டு தினங்களில் இரண்டு சடலங்களை இலங்கைப் பொலிஸார் மீட்டுள்ளனர். மன்னார் தாழ்வுபாடு கடற்கரையில் ஒரு சடலமும் கிளிநொச்சி கோவிந்தன் கடைச் சந்திப்பகுதியில் உள்ள நீர் வாய்காலொன்றில் இருந்து ஒரு சடலமும் பொலிஸாரினால் மீட்க்கப்பட்டுள்ளது. மன்னார் தாழ்வுபாடு கடற்கரைப் பகுதியில் கடந்த திங்கள்கிழமை மாலை ஆண்ணொருவரின் சடலம் கரையொதுங்கிய நிலையில் பொதுமக்களினால் மன்னார் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. இந்த நிலையில் பொலிஸாரும் சட்ட வைத்திய அதிகாரியும் தாழ்வுபாட்டில் கரையொதுங்கிய சடலத்தை செவ்வாய் அன்று பார்வையிட்டதுடன் குறித்த சடலத்தை உடற்கூற்றுப் பரிசோதனைக்காக மன்னார் பொது வைத்தியசாலையில் கையளித்துள்ளனர்.
மே 25 19:45

செல்வந்தர் ஒருவர் வில்லாம்பெருக்கு என்ற வனப்பகுதியை அழிப்பதாக முறைப்பாடு

(மன்னார், ஈழம் ) வட மாகாணம் மன்னார் மாவட்டம் மன்னார் தீவில் அமைந்துள்ள ஒலைத்தொடுவாய் வில்லாம்பெருக்கு எனும் புதர்களும் பனை மரங்களும் அடர்ந்த வனப்பகுதி, செல்வந்த தொழில் அதிபர் ஒருவரினால் கடந்த ஒரு வருடமாக சட்டவிரோதமாக அழிக்கப்பட்டுவரும் நிலையில், உயிரியலாளர்களோ சூழலியலாளர்களோ அதையிட்டுக் கவனம் செலுத்தாதவில்லையென விசனம் தெரிவிக்கப்படுகின்றது. அத்தோடு பிரதேச அரசியல்வாதிகளும் மன்னார் மாவட்டத்தைப் பிரதிநிதிப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களும் குறித்த செல்வந்தரின் சட்டவிரோத காடழிப்புத் தொடர்பாக மௌனமாக உள்ளதாக ஒலைத்தொடுவாய் தமிழ் கிராமத்தைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் கூர்மைச் செய்தித் தளத்திற்குக் கவலை வெளியிட்டனர்.
மே 24 21:09

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு வேண்டுகோள்

(வவுனியா, ஈழம்) தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை விவகாரம் தொடர்பாக கட்சி, கொள்கை பேதம் கடந்து தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து அரசாங்கத் தரப்புடன் பேசியுள்ளமை எமக்கு ஒரு சிற்றாறுதலைத் தருவதாக இலங்கை ஒற்றையாட்சி அரசின் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்கள் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழர் முற்போக்கு கூட்டணி ஆகிய கட்சிகளை சேர்ந்த 12 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து அரசாங்கத்தின் அயலுறவுத்துறை அமைச்சரும் சிரேஸ்ட அரசியல் வாதியுமான தினேஸ் குணவர்த்தனவுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தையினை மேற்கொண்டுள்ளார்கள்.
மே 22 19:42

றிஷாட் பதியுதீன் ஆதரவாளர்கள் மீது பொலிஸார் விசாரணை

(மன்னார், ஈழம் ) முன்னாள் வட மாகாண சபை உறுப்பினரும் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியூதீனின் இளைய சகோதரருமான ரிப்ஹான் பதியூதீன் மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் முகம்மது முஜாஹித் மற்றும் மாந்தை பிரதேச சபையின் பிரதித் தவிசாளர் முகம்மது ஹனிபா முகம்மது தௌபீக் உட்பட நால்வருக்கு எதிராக மன்னார் அடம்பன் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மாந்தை பிரதேச சபையின் அங்கம் வகிக்கும் பெண் உறுப்பினர் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் அடம்பன் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் புலன் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக கூர்மைச் செய்தி தளத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.
மே 21 20:58

பெண் உறுப்பினரைக் கடத்தியும் வெகுமதிகள் வழங்கப்பட்டும் அச்சுறுத்தியும் கைப்பற்றப்பட்ட மாந்தை மேற்கு பிரதேச சபை

(மன்னார், ஈழம் ) வட மாகாணம் மன்னார் மாவட்டம் மாந்தை மேற்கு பிரதேச சபையின் புதிய தவிசாளராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இராமநாதன் வவுனியன் ஆதி அருணாசலம் தெரிவாகியுள்ளார். இவ்வாறான நிலையில் மாந்தை மேற்குப் பிரதேச சபையின் நிர்வாகத்தை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி மீண்டும் கைப்பற்றியுள்ளது. எனினும் குறித்த தவிசாளர் தெரிவில் மாந்தை மேற்கு பிரதேச சபையின் பெண் உறுப்பினர் ஒருவரைக் கடத்தியும், சபையின் உறுப்பினர்கள் சிலருக்கு பண வெகுமதிகள் வழங்கியும், சில உறுப்பினர்களுக்கு அச்சுறுத்தல்கள் விடுத்தும் ஜனநாயகத்திற்கு முரணாக, அநீதியான முறையில் குறித்த பிரதேச சபை நிர்வாகம் கைப்பற்றப்பட்டிருப்பதாக பிரதேச சபையின் எதிர்கட்சி உறுப்பினர்கள் கூர்மை செய்தித் தளத்திற்கு தெரிவித்தனர்.