நிரல்
ஜூலை 30 20:56

மடு தேவாலய பெருநாள் நடைபெறுமென அறிவிப்பு

(மன்னார், ஈழம் ) இலங்கையின் வட மாகாணம் மன்னார் மாவட்டத்தின் மடு மாதா தேவாலய வருடாந்த ஆவணி பெருநாள் எதிர்வரும் 15 ஆம் திகதி நடைபெறும் நிலையில் குறித்த நிகழ்வில் மன்னார் மாவட்ட பக்தர்களை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் கலந்துகொள்வதற்கு அனுமதிப்பதுடன் வெளி மாவட்ட பக்தர்களைக் கலந்து கொள்வதற்கு அனுமதிப்பதில்லை எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ. ஸ்ரன்லி டி மெல் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார்.
ஜூலை 29 21:43

உயிரிழந்த சிறுமியின் உடலை அடக்கம் செய்த மயானத்தில் இருந்து எடுத்து மீண்டும் மருத்துவப் பரிசோதனை

(வவுனியா, ஈழம்) இலங்னை ஒற்றையாட்சி அரசின் நாடாளுமன்ற உறுப்பினர் றிஷாட் பதியுதீனின் கொழும்பில் உள்ள வீட்டில் பணியாற்றிய நிலையில் உயிரிழந்த சிறுமியின் சடலம் நாளை மறுதினம் 30 ஆம் திகதி வெள்ளிக்கிழமை அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் இருந்து எடுக்கப்பட்டு மீண்டும் மருத்துவப் பரிசோதனை செய்யப்படவுள்ளதாக டயகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுஜீவ குணதிலக தெரிவித்தார். சிறுமியின் உடல் நுவரேலியா மாவட்டம் டயகம தோட்டத்தின் மூன்றாம் பகுதியில் உள்ள பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
ஜூலை 29 20:59

யாழ்ப்பாணத்தில் 30 வயதுக்கு மேற்பட்டோருக்குத் தடுப்பூசிகள் செலுத்தும் பணி ஆரம்பம்

(யாழ்ப்பாணம், ஈழம்) இலங்கையின் தமிழர் தாயகப்பகுதியான வட மாகாணம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இன்று 29ஆம் திகதி வியாழன் தொடக்கம் முதன் முறையாக 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொவிட்- 19 தடுப்பூசிகள் செலுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆர். கேதிஸ்வரன் தெரிவித்தார். சீனாவில் இருந்து பல இலட்சம் சினோஃபார்ம் தடுப்பூசிகள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் விமானம் மூலம் இலங்கைக்கு எடுத்துவரப்பட்டது. குறித்த தடுப்பூசிகளில் சுமார் மூன்று லட்சத்தி 75 ஆயிரம் தடுப்பூசிகள் வட மாகாணத்திற்கு கிடைக்கப் பெற்றது.
ஜூலை 28 20:54

ஆட்சி மாற்றம் குறித்து சஜித் மைத்திரி உரையாடல்- புலனாய்வு அறிக்கை கோட்டாவிடம் கையளிப்பு

(வவுனியா, ஈழம்) ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் கொழும்பில் சந்தித்து ஆட்சி மாற்றம் தொடர்பாகப் பேசி வருவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் சிறப்புப் புலானய்வுப் பொலிஸார் தகவல் வழங்கியுள்ளனர். கோட்டாபய ராஜபக்விடம் புலனாய்வு அறிக்கையைக் கையளி;க்கப்பட்டுள்ளதாகவும் ஆனாலும் அது தொடர்பாக எந்தவொரு கருத்தையும் ஜனாதிபதி கோட்டாபய வெளியிடவில்லையெனவும் உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன. இலங்கை ஒற்றையாட்சி அரசில் யார் ஆட்சியாளர்கள் என்பதை இதுவரை காலமும் தீர்மானித்து வந்த இந்தியா மற்றும் அமெரி்க்கா போன்ற மேற்குலக நாடுகள், 2015 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட மைத்திரி- ரணில் அரசாங்கத்தின் தோல்வியின் பின்னர் ஒதுங்கிவிட்டன.
ஜூலை 27 19:58

எதிர்ப்புக்கு மத்தியில் சமன் பந்துலசேன வடமாகாண தலைமைச் செயலாளராகப் பதவியேற்பு

(யாழ்ப்பாணம், ஈழம்) இலங்கையில் தமிழர்களின் தாயகப்பகுதியான வட மாகாணத்தின் அதி உயர் அரச பதவியான மாகாண தலைமைச் செயலாளர் பதவிக்கு இலங்கை நிர்வாகச் சேவையைச் சேர்ந்த சிங்கள அதிகாரி எஸ். எம். சமன் பந்துலசேன நியமிக்கப்பட்ட நிலையில், யாழ்ப்பாணத்தில் நேற்று திங்கள் முற்பகல் குறித்த பதவியை அவர் பொறுப்பேற்றுள்ளார். வட மாகாண சபையின் தலைமை செயலாளராக குறித்த சிங்கள அதிகாரி நியமனம் செய்யப்பட்டதிற்கு பல தமிழ் அரசியல்வாதிகள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்த நிலையில் மேற்படி சிங்கள அதிகாரி தலைமை செயலாளர் பதவியைப் பொறுப்பேற்றுள்ளார்.
ஜூலை 27 10:32

இந்தியா தொடர்பாக தப்புக்கணக்குகள் போடும் தமிழக, ஈழ, புலம்பெயர் தமிழர்கள்

(யாழ்ப்பாணம், ஈழம்) பாகிஸ்தான் தவிர்ந்த இலங்கை உள்ளிட்ட தெற்காசிய சார்க் (SAARC) நாடுகளின் பிம்ஸ்ரெக் (BIMSTEC) அமைப்பை மாத்திரம் இயக்குவதற்கு இந்தியா அண்மைய வருடங்களில் பகீரதப் பிரயத்தனங்களை மேற்கொண்டு வருவது தெரிந்ததே. அமெரிக்காவுடன் குவாட் (QUAD) எனும் இந்தோ பசுபிக் இராணுவ வியூகத்தில் இணைந்திருக்கும் இந்தியா, ஏப்ரல் இறுதியில் Supply Chain Resilience Initiative (SCRI) என்ற அமைப்பை QUAD உறுப்பு நாடுகளான ஜப்பானுடனும் அவுஸ்திரேலியாவுடனும் உருவாக்கியது. பதிலடியாக இந்தியாவைத் தவிர்த்து பாகிஸ்தான், இலங்கை போன்ற நாடுகள் அடங்கலாக தெற்கு நாடுகளின் வறுமை ஒழிப்பு மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு மையத்தை (China-South Asian Countries Poverty Alleviation and Cooperative Development Centre) சீனா ஜூலை மாதம் உருவாக்கியது.
ஜூலை 26 23:41

தமிழ் சிறுமி உயிரிழந்த விவகாரம்- முப்பது அறிக்கை பதிவு

(வவுனியா, ஈழம்) இலங்கை ஒற்றையாட்சி நாடாளுமன்ற உறுப்பினர் றிஷாட் பதியுதீனின் கொழும்பு இல்லத்தில் பணியாற்றிய தமிழச் சிறுமி உயிரிழந்த சம்பம் தொடர்பாக இதுவரை முப்பது அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கைப் பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது. விசாரணைகள் எந்தவொரு அரசியல் அழுத்தங்களுக்கும் இடம்கொடாது நேர்மையாக முன்னெடுக்கப்படுமெனவும் பொலிஸ் திணைக்களம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. விசாரணைகள் மூலம் மேலும் பல பாலிஸ்துஸ்பிரயோகங்கள் பற்றிய தகவல்கள் வெளிவந்துள்ளதாகவும் அது பற்றிய விசாரணை அறிக்கைகள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது என்றும் பொலிஸ் திணைக்களம் கூறியுள்ளது.
ஜூலை 25 22:55

இடிந்துபோன மோடியின் தேசியவாதம்

(யாழ்ப்பாணம், ஈழம்) நரேந்திர மோடியின் மிகை- தேசியவாத உள்நாட்டு நிகழ்ச்சி நிரல் இந்தியாவை ஒரு 'விஸ்வகுரு' அல்லது 'உலகிற்கு மாஸ்டர்' ஆக்குவதற்கான அவரது இலட்சியம் உட்பட இந்துத்துவ தேசியச் சிந்தனைகள் எல்லாமே தற்போது சிக்கலில் உள்ளன. கோவிட் 19 நோய்ப் பரவலினால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இந்தியா எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிகள் மற்றும் உள்ளூர் உற்பத்திகளின் மந்த நிலை இந்தியாவை வெளிநாடுகளில் கையேந்த வைத்திருக்கிறது. எதிரி நாடுகளான சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட 20 ற்கும் அதிகமான நாடுகளில் இருந்து இந்தியா உதவிகளைப் பெற்றிருப்பதாகவும் இது மோடியின் வெளியுறவுக் கொள்கைளில் பாரிய சரிவு என்றும் அமெரிக்காவை மையமாகக் கொண்ட பொறின்பொலிஸி (Foreign policy)என்ற கொள்கை இணையத்தளம் கூறுகின்றது.
ஜூலை 25 22:25

சிறுமி உயிரிழந்த விவகாரம்- றிஷாத் பதியூதீனின் மனைவி உட்பட நால்வரை தொடர்ந்து விசாரணை செய்ய உத்தரவு

(வவுனியா, ஈழம்) மலையகப் பகுதி சிறுமி இஷாலினி தீ காயங்களினால் உயிரிழந்தமை மற்றும் அவர் மீதான பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பில் பொலிஸாரினால் கடந்த வெள்ளி அதிகாலை கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் றிஷாத் பதியூதீனின் மனைவி உட்பட நால்வரை நாளை திங்கள் 26 ஆம் திகதி வரையான 48 மணித்தியாலயங்கள் பொலிஸ் காவலில் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு கடந்த சனிக்கிழமை கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் றிஷாத் பதியூதீனின் கொழும்பு பௌத்தலோக மாவத்த இல்லத்தில் வீட்டுப்பணிக்காகச் சேவையில் ஈடுபடுத்தப்பட்ட டயகம பகுதி சிறுமியான ஜுட் குமார் இஷாலினி தீயினால் ஏற்பட்ட எரிகாயத்துடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கடந்த 3ஆம் திகதி அனுமதிக்கப்பட்ட நிலையில் கடந்த 15ஆம் திகதி மரணமடைந்தார்.
ஜூலை 24 20:49

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் பொதுத் தலைவராக ரணில் விக்கிரமசிங்கவை நியமிக்க முயற்சி

(வவுனியா, ஈழம்) இலங்கை ஒற்றையாட்சி அரசின் நாடாளுமன்றத்திற்குள் பொதுத் தலைமைத்துவம் ஒன்றை வழங்கும் முயற்சியில் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஈடுபட்டுள்ளார். சஜித் பிரேமதாச எதிர்க்கட்சித் தலைவராகவுள்ள நிலையில், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, ஜே.வி.பி மற்றும் மனோ கணேசன் ஆகியோரின் ஒத்துழைப்புடன் எதிர்க்கட்சிகளின் பொதுத் தலைவராகச் செயற்படுவது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. ரணில் விக்கிரமசிங்க நேற்று வெள்ளிக்கிழமை இந்தக் கட்சிகளின் தலைவர்கள், செயலாளர்களைச் சந்தித்து உரையாடியுள்ளார். சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் சிலரோடும் உரையாடியுள்ளார்.