நிரல்
ஒக். 12 22:55

மின்சார அபிவிருத்தி- அமெரிக்க நிறுவனத்துடன் ஒப்பந்தம்

(கிளிநொச்சி, ஈழம்) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகியோரை மையப்படுத்திய அரசாங்கம் அமெரிக்காவின் நிவ்போர்ட் நிறுவனத்துடன் அரசாங்கம் ஒப்பந்தம் ஒன்றை இரகசியமான முறையில் கைச்சாத்திடத் தீர்மானத்துள்ளதாக மின்சாரசபை சேவையாளர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. மின்சார சபை விரிவாக்கத் திட்டத்தில் பாதிப்பு எதுவுமே ஏற்படாதெனக் குறிப்பிடும் அரசாங்கம் கைச்சாத்திடப்பட்டுள்ள ஒப்பந்தத்தின் முழு வரைபையும் இதுவரை வெளிப்படுத்தவில்லையென மின்சாரசபை சேவையாளர் சங்கத்தின் தலைவர் ரஞ்சன் விஜயலால் தெரிவித்தார்.
ஒக். 12 21:08

அருவி ஆற்றுக் கரையோர மணல் அகழ்வுக்கு எதிராக மனு

(மன்னார், ஈழம்) வட மாகாணத்தின் மன்னார் மாவட்டத்தில் நானாட்டான் பிரதேச செயலக பிரிவில் உள்ள பரிகாரிகண்டல் கிராமசேவையாளர் பகுதியில் அருவி ஆற்றுக் கரையோரமாக நீண்ட காலமாக நடைபெற்று வரும் முறையற்ற மணல் அகழ்வினால், சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படுவதாகத் தெரிவித்து அதற்கு எதிராக மன்னார் நீதவான் நீதிமன்றில் இன்று 12ஆம் திகதி செவ்வாய்கிழமை வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஒக். 11 23:06

தனக்கென ஒரு காணித்துண்டு இல்லாமல் வாழ்ந்தவர் அந்தோணி மார்க்

(மன்னார், ஈழம்) காணி உத்தியோகத்தராகவும், உதவி காணி ஆணையாளராகவும் சுமார் முப்பத்து மூன்று வருடங்கள் அரச சேவையில் தொடர்ச்சியாகப் பணியாற்றி, மக்களுக்கு பெரும் சேவையாற்றிய பேதிறு அந்தோணி மார்க் தனது 78வது வயதில் மரணிக்கும் வரை, குடியிருப்பதற்குத் தனக்கென ஒரு காணித்துண்டு இல்லாமல் மன்னார் நகரின் பல இடங்களிலும் வாடகை வீடுகளிலேயே வசித்த நல் மனம் படைத்த மனிதரென மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ. ஸ்ரன்லி டி மேல் தெரிவித்தார்.
ஒக். 11 22:44

மாகாண சபைத் தேர்தல்களை நடத்துமாறு இந்திய வெளியுறவுச் செயலாளர் வலியுறுத்தவில்லை- அமைச்சர் பீரிஸ்

(வவுனியா, ஈழம்) 13 ஆவது திருத்தச் சட்டத்திற்கு அமைவாக மாகாண சபைத் தேர்தல்களை விரைவாக நடத்த வேண்டுமென இந்திய வெளியுறவுச் செயலாளர் கஸ்வர்த்தன ஸ்ரிங்கா இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கவில்லையென வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார். மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு கோருகின்ற அதிகாரம் இந்தியாவுக்குக் கிடையாதெனவும் அமைச்சர் பீரிஸ் தெரிவித்தார். சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அமைச்சர் பேராசிரியர் பீரிஸ் இவ்வாறு தெரிவித்தார்.
ஒக். 10 21:46

உரத்துக்குத் தட்டுப்பாடு- விவசாயிகள் கவலை

(மன்னார், ஈழம்) இலங்கையின் தமிழர் தாயகமான வட மாகாணத்தின் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் இவ்வருட காலபோக நெற்செய்கைக்கான விதைப்பு வேலைகளை ஆரம்பித்துள்ள நிலையில் வடக்கின் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் தமது விவசாய நிலங்களில் காலபோகத்திற்கான உழவு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வருட பெரும்போக நெற்செய்கைகளில் ஈடுபடும் வட மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களையும் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகளும், இலங்கையில் தற்போது நிலவும் பாரிய உரத் தட்டுப்பாடுகளுக்கு விரைவில் முகம் கொடுக்கவேண்டிய நிலை ஏற்படும் என வட மாகாண விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர்.
ஒக். 10 21:26

தமிழ் அரசியல் கைதி 12 ஆண்டுகளின் பின்னர் நிரபராதியெனத் தீர்ப்பளிக்கப்பட்டு விடுதலை

(மட்டக்களப்பு, ஈழம்) இலங்கை இராணுவத்தினரால் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுச் சுமார் 12 வருடங்களாக சிறையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதி ஒருவர் இன்று ஞாயிற்றுக்கிழமை மொனராகலை நீதவான் நீதிமன்றத்தினால் நிரபராதி என தீர்ப்பளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளதாகக் குரலற்றவர்களின் குரல் அமைப்பு தெரிவித்துள்ளது. அம்பாறை அக்கரைப்பற்று, சின்னப்பனங்காட்டை சேர்ந்த 29 வயதான கதிரவேலு கபிலன் என்பவரே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
ஒக். 09 22:40

மன்னாரில் சரணடைய வந்த ஐவர் விபத்தில் காயம்

(மன்னார், ஈழம்) கோஷ்டி மோதல் தொடர்பாக மன்னார் பொலிஸாரினால் தேடப்பட்டு வந்த நிலையில் சரணடையச் சென்ற ஐவர் இன்று 9ஆம் திகதி சனிக்கிழமை காலை 10.30க்கு மன்னார் பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக நடைபெற்ற வீதி விபத்தில் படுகாயமடைந்து மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மன்னார் எழுத்தூர் கிராமசேவையாளர் பிரிவில் உள்ள தோட்டக்காடு பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை காலை தனியாருக்குச் சொந்தமான காணியொன்றைத் துப்பரவு செய்யும் பணியில் ஈடுபட்டவர்களுக்கும், மற்றுமொரு சாராருக்கும் இடையில் ஏற்பட்ட கைகலப்பு பெரும் மோதலாக உருவெடுத்தது.
ஒக். 08 21:39

இனவாதத்தை அரசாங்கம் தூண்டுவதாகக் குற்றச்சாட்டு

(மன்னார், ஈழம்) ராஜபக்ச அரசாங்கம் மற்றுமொரு இனவாத மோதலுக்குத் துண்டுவதாக இன்று வெள்ளிக்கிழமை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். அமைச்சர்கள் சிலரும் மற்றும் பொதுபல சேனவின் பொதுச் செயலாளர் அத்தே ஞானசார தேரர் ஆகியோரின் பேச்சுகள். செயற்பாடுகள் அச்சத்தை உருவாக்கி வருவதாகவும் கூட்டிக்காட்டியுள்ளனர். சபை ஒத்திவைப்புவேளைப் பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றிய ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் இம்ரான் மகுறூப். ஞானசார தேரரின் செயற்பாடுகளினால் முஸ்லிம் இளைஞர்கள் ஆத்திரமடைந்துள்ளதாகக் கூறினார்.
ஒக். 07 20:38

ராஜபக்ச குடும்பத்தின் சொத்து என்கிறது எதிர்க்கட்சி

(மன்னார், ஈழம்) மூலம் வெளிப்படுத்தப்படட நிருபமா ராஜபக்ச அவருடைய கணவர் திருக்குமார் நடேசன் ஆகியோரின் சொத்துக்கள் அனைத்தும் ராஜபக்ச குடும்பத்துக்குச் சொந்தமானவையென பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. பணத்தை மறைத்து வைத்துள்ள மேலும் பலருடைய பெயர்கள் வெளிவரலமெனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளர்.
ஒக். 06 21:24

கோயில்மோட்டை காணி விவகாரம்- கொழும்பில் ஆர்ப்பாட்டம்

(மன்னார், ஈழம்) மன்னார் மாவட்டத்தின் மடு பிரதேச த்தில் உள்ள அரச காணியான கோயில்மோட்டை எனும் விவசாயக் காணியை மடு மாதா ஆலய நிருவாகத்தினர் தற்போது உரிமை கோரி வருவதாகவும், எனினும் அதனை நீண்ட காலமாக நெற்செய்கை மேற்கொண்ட தமக்கு வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனும் கோரிக்கையை முன்வைத்து மடுப் பகுதியைச் சேர்ந்த தமிழ் விவசாயிகள் நேற்று செவ்வாய் மாலை கொழும்பு ஜனாதிபதி செயலகத்திற்கு அருகாமையில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.