செய்தி: நிரல்
ஒக். 28 18:49

மன்னாரில் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு

(மன்னார், ஈழம்) தமிழர் தாயகப் பகுதியான வட மாகாணத்தின் மன்னார் மாவட்டத்தில் கடந்த கால யுத்தத்தில், அசையா சொத்துகள் உடமைகள் மற்றும் உயிர் இழப்புகள் என கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளான பொதுமக்களுக்கு நஷ்டஈடு வழங்கும் நிகழ்வு கடந்த 25ஆம் திகதி திங்கள் மாலை மன்னார் மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது. மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ. ஸ்ரன்லி டீ மேல் தலைமையில் நடைபெற்ற மேற்படி நஷ்டஈட்டுக்கான காசோலை வழங்கும் நிகழ்வில் இலங்கையின் ஆளும் பொதுஜன பெரமுன கட்சியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களின் அபிவிருத்திக் குழுக்களின் தலைவருமான காதர் மஸ்தான் கலந்துகொண்டு இழப்பீட்டுக்கான காசோலைகளை வழங்கி வைத்தார்.
ஒக். 27 21:48

ஒரே நாடு ஒரே சட்டம்- செயலணியின் தலைவராக ஞானசார தேரர் நியமனம்- நால்வர் முஸ்லீம்கள்

(மன்னார், ஈழம்) இலங்கை ஒற்றையாட்சி அரசியலமைப்பின் 33 ஆம் உறுப்புரிமையின் பிரகாரம் ஜனாதிபதிக்குரிய அதிகாரத்தின் கீழ் ஒரே நாடு ஒரே சட்டம் என்பதைச் செயற்படுத்த 13 பேர் அடங்கிய ஜனாதிபதிச் செயலணி ஒன்றை கோட்டாபய ராஜபக்ச நியமித்துள்ளார். தமிழ், முஸ்லிம் மக்களுக்கு எதிராக வன்முறைகளைத் தூண்டி வரும் ஞானசார தேரர் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் பொதுபல சேன அமைப்பின் செயலாளராகப் பதவி வகித்துக் கொண்டு தமிழ், முஸ்லிம் மக்களுக்கு எதிரான பல வன்முறைகளில் ஏற்கனவே ஈடுபட்டவர் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. இந்தவொரு நிலையில் தேரர் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள இந்தச் செயலணியில் நான்கு முஸ்லிம் பிரநிதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால் தமிழர்கள் எவரும் இல்லை.
ஒக். 26 20:09

மன்னாருக்குப் பயணம் செய்த அதானி குடும்பம்

(மன்னார், ஈழம்) இலங்கையின் தமிழர் தாயகமான வட மாகாணத்தின் மன்னார் மாவட்டத்திற்கு இந்தியாவின் கோடிஸ்வர வர்த்தகர்களான அதானி குடும்பத்தைச் சேர்ந்த சிலர் நேற்று 25ஆம் திகதி திங்கள் மாலை திடீர் விஜயமொன்றை மேற்கொண்டனர். இலங்கை விமானப் படைக்கு சொந்தமான ஹெலிகாப்டரில் மன்னார் வருகை தந்த மேற்படி வர்த்தகர்களுடன் விமான சேவைகள் மற்றும் ஏற்றுமதி வலயங்கள் அபிவிருத்தி இராஜாங்க டி.வி.சானக்க மற்றும் இலங்கை முதலீட்டுச் சபையின் தலைவர் சஞ்சய மொஹத்தாலா ஆகியோர் வருகை தந்தனர்.
ஒக். 25 21:43

கொவிட் முடக்கத்தின் பின்னர் ஆரம்பப் பிரிவுப் பாடசாலைகள் ஆரம்பம்

(யாழ்ப்பாணம், ஈழம்) கொவிட் தொற்று நோய்த் தடுப்புக்கான முடக்கத்தின் பின்னர் இலங்கைத்தீவு முழுவதிலும் உள்ள பாடசாலைகளின் ஆரம்பப் பிரிவுகள் அனைத்தும் இன்று திங்கட்கிழமை முதல் இயங்க ஆரம்பித்துள்ளன. சுமார் ஆறு மாதங்களின் பின்னர் இன்று ஆரம்பப் பிரிவுப் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஏனைய பிரிவு வகுப்புகள் அனைத்தும் அடுத்த வாரம் முதல் செயற்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்துத் தடை எதிர்வரும் 31 ஆம் திகதி நள்ளிரவுடன் நீக்கப்படுவதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
ஒக். 25 20:52

மன்னாரில் போதைவஸ்த்துப் பாவனை அதிகரிப்பு

(மன்னார், ஈழம்) வட மாகாணம் மன்னார் மாவட்டத்தின் தாழ்வுபாடு கிராமத்தில், கஞ்சா போதைவஸ்து வைத்திருந்த குற்றச்சாட்டில் 18 வயதுடைய இளைஞரொருவரை கடந்த சனிக்கிழமை மாலை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த இளைஞரின் வீட்டில் மறைத்து வைக்கப்பட்ட சுமார் 10 கிலோ நிறையுடைய கஞ்சா பொதிகளும் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. மன்னார் பொலிஸ் நிலையத்தின் விசேட புலனாய்வு பிரிவிற்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து தாழ்வுபாட்டு கிராமத்தில் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது அங்கு வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கஞ்சா பொதிகளைப் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
ஒக். 24 21:06

நானாட்டான் பிரதேச சபையின் புதிய உறுப்பினர் நியமனம்

(மன்னார், ஈழம்) மன்னார் மாவட்டம் நானாட்டான் பிரதேச சபையின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பான புதிய உறுப்பினராக முருங்கன் கற்கிடந்த குளத்தைச் சேர்ந்த பெனடிற் யாக்கோப்பிள்ளை நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் நானாட்டான் பிரதேச சபைக்கு ஏலவே தெரிவாகிய உறுப்பினர் ஒருவர் கடந்த 2020ஆம் ஆண்டு மரணமடைந்த நிலையில் அவரின் வெற்றிடத்திற்கே மேற்படி உறுப்பினர் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தலில் நானாட்டான் பிரதேச சபைக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் பிரதேச சபை உறுப்பினராக நானாட்டான் ரசூல் புதுவெளியைச் சேர்ந்த நாகூர் மீரா ராசிக் பரீத் தெரிவானார்.
ஒக். 23 20:18

மன்னார் வைத்தியசாலைக்கு உபகரணங்கள் கையளிப்பு

(மன்னார், ஈழம்) வட மாகாணம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் நீண்ட காலத் தேவையாக காணப்பட்ட பல வைத்திய உபகரணங்கள் மற்றும் விலையுயர்ந்த அத்தியாவசிய உயிர் காக்கும் கருவிகள் ஆகியன எருக்கலம்பிட்டி தனவந்தர்கள் மற்றும் "காதர் ஹாஜீயார்" எனும் அமைப்பினரால் கடந்த திங்கள் அன்பளிப்பு செய்யப்பட்டது. மன்னார் எருக்கலம்பிட்டி பிரதேச வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவின் வேண்டுகோளுக்கிணங்க மன்னார் எருக்கலம்பிட்டி மனித உரிமைகள் அமைப்பின் பிரதிநிதியும் மனித உரிமை அமைப்புகளின் ஆர்வலருமான எம்.ஏ.சி. கமால்தீனின் அயராத முயற்சி எடுத்திருந்தார்.
ஒக். 22 21:53

நாடாளுமன்றத்தில் ஆர்ப்பாட்டம்- விவசாயிகளுக்கு உரம் வழங்குமாறு உறுப்பினர்கள் வலிறுத்தல்

(மட்டக்களப்பு, ஈழம்) விவசாயிகளுக்கு உரம் வழங்குமாறு கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் ஜே.வி.பி உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர்கள் பங்குபற்றியிருந்தனர். இன்று காலை சபாநாயகர் மகிந்த யாப்பா அபயவர்த்தன தலைமையில் முற்பகல் 10 மணிக்கு நாடாளுமன்றம் கூடியதும், வாய்மூல கேள்வி நேரம் இடம்பெற்றது. அதன் பின்னர் சுலோக அட்டைகளைக் கைகளில் ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட உறுப்பினர்கள் விவசாயகளுக்கு உரம் வழங்க வேண்டுமெனக் கோசம் எழுப்பினர்.
ஒக். 21 17:38

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் விசாரணைகளில் சந்தேகம்- பகிரங்கமாகக் கூறுகிறார் பேராயர்

(வவுனியா, ஈழம்) இலங்கைத்தீவில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு அன்று தேவாலயங்களில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளை கத்தோலிக்கத் திருச்சபையின் கர்தினால், பேராயர் மல்கம் ரஞ்சித் சந்தேகம் வெளியிட்டுள்ளார். விசாரணைகள் தொடர்பாகச் சந்தேகத்துக்குரிய கேள்விகளை பேராயர் எழுப்பினார். கொழும்பு கொச்சிக்கடை தேவாலயத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற விசேட ஆராதனையில் நிகழ்த்திய பிரசங்கத்தின்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஒக். 20 10:19

மின் நிலையம் அமெரிக்காவிடம்- உயர் நீதிமன்றத்தில் மனு

(வவுனியா, ஈழம்) கொழும்பின் அயல் மாவட்டமான கம்பகா மாவட்டத்தில் உள்ள கெரவலப்பிட்டிய மின் நிலையத்தின் 40 சதவீத பங்குகளை அமெரிக்காவின் நிவ்போர்ட் நிறுவனத்துக்கு விற்பனை செய்வதைத் தடுக்குமாறு கோரி கத்தோலிக்கத் திருச்சபையின் கர்தினால் பேராயர் மல்கம் ரஞ்சித் எல்லே குணவன்ச தேரர் ஆகியோர் இணைந்து உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளனர்.