நிரல்
மார்ச் 19 06:37

பாகிஸ்தான் - இலங்கை, போராட்டங்களின் பின்னணி

(வவுனியா, ஈழம்) இலங்கைத்தீவில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான போராட்டங்களும், பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் இம்ரான்கானைக் கைது செய்வதற்கு எதிரான போராட்டங்களும் தீவிரமடைந்து வருவதன் பின்னணியில் புவிசார் அரசியல் - பொருளாதாரக் காரணிகளே செல்வாக்குச் செலுத்துகின்றன. சீனச் சார்புடைய இம்ரான்கானைக் கைது செய்ய பாகிஸ்தான் பொலிஸார் திட்டமிட்டதால் எழுந்த போராட்டங்கள், வன்முறைகள் போன்றவற்றுக்கு மத்தியிலேதான் பாகிஸ்தானில் உள்ள அமெரிக்கத் தூதுவர் டொனால்ட் புளோமி (Donald Blome) நான்கு தசம் ஐந்து மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கவுள்ளதாக அறிவித்திருக்கிறார். ஏனெனில் இம்ரான் கானின் அரசியல் செல்வாக்கு மீண்டும் அதிகரித்துள்ளது. ஆதரவுப் போராட்டங்களும் தீவிரமடைந்து வருகின்றன.
மார்ச் 17 17:36

தொழிற்சங்கப் போராட்டங்கள் தற்காலிக நிறுத்தம்

(வவுனியா, ஈழம்) அரசாங்கத்தின் அடக்கு முறை நிறுத்தப்பட்டு அரச ஊழியர்களின் சம்பள உயர்வு மற்றும் வரி நீக்கம் போன்றவற்றுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இணக்கம் தெரிவிக்க மறுத்தால் போராட்டம் தொடரும் என்று தொழிற்சங்கக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. சாதகமாகப் பரிசீலிப்பதாக உறுதியளிக்கப்பட்டுள்ளது என்றும் உரிய பதில் இல்லை என்றால் போராட்டம் தொடரும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தற்காலிகமாக தொழிற் சங்க நடவடிக்கைகள் இடை நிறுத்தப்பட்டுள்ளது என்றும் பேச்சுவார்த்தையில் அனைத்துத் தரப்பினரும் பங்கொள்ள வேண்டும் எனவும் தொழிற்சங்கக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
மார்ச் 12 10:03

இனவாதத்தை இடமாற்ற முற்படும் வேலை நிறுத்த போராட்டங்கள்

(வவுனியா, ஈழம்) ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தின் அடக்கு முறைக்கு எதிராக முப்பது அரச - தனியார் துறை தொழிற் சங்கங்கள் சில இடதுசாரிக் கட்சிகளின் ஆதரவுடன் நடத்தி வரும் தொடர் போராட்டங்கள், சர்வதேச நாணய நிதியம் வழங்கவுள்ள கடன் திட்டங்கள் மற்றும் சுற்றுலாத்துறைகளில் பாதிப்பை ஏற்படுத்தும் ஆபத்துக்கள் விஞ்சிக் காணப்படுகின்றன. தொடர் போராட்டங்களினால் சாதாரண மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்று அரசாங்கம் கூறுவதை நம்பக் கூடிய மன நிலையில் மக்கள் இல்லை. பிரித்தானிய அரசாங்கம் தமது பிரஜைகளுக்கு அறிவுறுத்திய பயண எச்சரிக்கை இலங்கைத்தீவின் அரசியல் நெருக்கடியையும் பகிரங்கப்படுத்தியுள்ளது. இப் போராட்டத்தில் பிரதான எதிர்க் கட்சியான சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி நேரடியாகப் பங்குபற்றில்லை. ஆனாலும் ஆதரவு கொடுத்துள்ளது.
மார்ச் 10 17:57

தேசிய பாதுகாப்பு துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராக சரத் வீரசேகர நியமனம்

(வவுனியா, ஈழம்) பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தை நீக்கம் செய்ய வேண்டும் என்றும் ஈழத் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர அரசியல் தீர்வைக் காண வேண்டிய அவசியம் இல்லை எனவும் கூறி வருகின்ற முன்னாள் இராணுவ அதிகாரியும் நாடாளுமன்ற உறுப்பினருமான சரத் வீரசேகர இலங்கைத் தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். தேசிய பாதுகாப்புத் தொடர்பான மேற்பார்வைக் குழு ஒன்றை அமைக்க வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பாதுகாப்பு அமைச்சர், நீதி அமைச்சர் வெளிவிவகார அமைச்சர் ஆகியோர் இணைந்து அமைச்சரவையில் முன்வைத்த கூட்டுப் பிரேரணையின் அடிப்படையிலேயே இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
மார்ச் 08 22:53

கொழும்பில் பல்கலைக்கழக மாணவர்கள் தொடர் போராட்டம்

(வவுனியா, ஈழம்) அரசாங்கத்தின் அடக்கு முறைகளுக்கு எதிராகப் பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்ச்சியாக போராட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில், புதன்கிழமை இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின்போதும் பொலிஸாருக்கும் மாணவர்களுக்கும் இடையே கடும் வாய்த்தர்க்கமும் மோதலும் ஏற்பட்டது. களனி பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய போராட்டம் இன்று இரவு வரை தொடர்ந்ததால் பொலிஸார் மிகக் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதனால் பல மாணவர்கள் பலர் சிதறி ஓடினர். வேறு பல மாணவர்கள் பொலிஸாருடன் நேருக்கு நேராக நின்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பொலிஸார் நீர்த்தாரைப் பிரயோகம் செய்தனர்.
மார்ச் 07 09:42

ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட 51/1 தீர்மானத்தை நிராகரிப்பதாக அறிவிப்பு

(வவுனியா, ஈழம்) ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை சபையில் கடந்த ஆண்டு ஒக்ரோபர் மாதம் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான 51/1 தீர்மானத்தை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளதாக இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி ஹிமாலி அருணதிலக தெரிவித்துள்ளார். ஆனாலும் ஜெனீவா மனித உரிமைச் சபையுடன் இலங்கை தொடர்ந்து உரையாடும் என்றும் அவர் கூறியுள்ளார். இதேவேளை, சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையின் (ICCPR) கீழ் இலங்கை தொடர்பான ஒவ்வொரு ஆண்டுக்குமான ஆறாவது காலகட்ட மீளாய்வு மார்ச் எட்டாம் ஒன்பதாம் திகதிகளில் ஜெனீவாவில் நடைபெறவுள்ளது.
மார்ச் 05 09:39

ஜீ 20 மாநாட்டில் விட்டுக்கொடுக்காத வல்லரசுகள்

(வவுனியா, ஈழம்) ரசிய - உக்ரெயன் போரை இந்தியா இதுவரை பகிரங்கமாகக் கண்டிக்காத நிலையில், ஜீ இருபதின் வெளியுறவு அமைச்சர்கள் மாநாடு இந்த மாதம் இரண்டாம் திகதி வியாழக்கிழமை மாலை வரை புதுடில்லியில் நடைபெற்றுள்ளது. தலைமைப் பொறுப்பை நரேந்திரமோடி ஏற்றதால் புதுடில்லியில் இடம்பெற்ற மாநாட்டில், உக்ரெய்ன் மீதான போரை நிறுத்த இந்தியா, ரசியாவுக்குப் புத்தி சொல்ல வேண்டும் என்ற இறுமாப்புடனேயே அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பங்குபற்றியிருந்தன. வெள்ளிக்கிழமை வெளியான இந்த நாடுகளின் நாளிதழ்களில் போரை நிறுத்துவது பற்றி மாநாட்டில் பேசப்பட்ட விடயங்கள் கசிந்திருந்தன.
மார்ச் 02 21:23

உள்ளூராட்சி சபைத் தேர்தல் ஒத்திவைக்கப்படுமா?

(வவுனியா, ஈழம்) வடக்குக் கிழக்கு உள்ளிட்ட இலங்கைத்தீவில் முந்நூற்று நாற்பது உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான திகதி தொடர்பாக நாளை வெள்ளிக்கிழமை இறுதி முடிவு அறிவிக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைத் தேர்தல்கள் ஆணைக்குழு கூடி இறுதி முடிவு எடுக்கும் என்றும், அதன் பின்னர் அரசாங்கம் அதிகாரபூர்வமாக அறிவிக்கும் எனவும் ஆணைக்குழு வட்டாரங்கள் கூறுகின்றன. உள்ளூராட்சி சபைத் தேர்தல் மார்ச் ஒன்பதாம் திகதி நடைபெறுமென தேர்தல் ஆணைக்குழு முன்னதாக கூறியிருந்தது. ஆனாலும் நிதி இல்லையென நிதியமைச்சின் செயலாளர் அறிவித்ததனால் தேர்தலை நடத்த முடியாதென தேர்தல்கள் ஆணைக்குழு உயர் நீதிமன்றத்திற்கு அறிவிவித்திருந்து.
பெப். 28 09:17

மின் கட்டணம், வரி உயர்வுக்கு எதிராக வேலை நிறுத்தப் போராட்டம்

(வவுனியா, ஈழம்) மின்சாரக் கட்டணம் அறுபத்து ஆறு வீதத்தினால் உயர்வடைந்துள்ளமை, அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கின்றமைக்கு மற்றும் வரி அதிகரிப்புக்கு எதிராக நாளை புதன்கிழமை கொழும்பில் அனைத்துத் தொழிற் சங்கங்களும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளன. அரச மற்றும் தனியார் வங்கிகள் தனியார் அரச மற்றும் வர்த்தக நிலையங்கள் அனைத்தும் நாளை மூடப்படும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. ஆனால் போராட்டம் தொடர்பாகத் தொழிற்சங்க அமைப்புகள் ஊடகங்களில் பகிரங்க அறிவிப்பு வெளியிடவில்;லை.
பெப். 27 21:06

இலங்கை பொலிஸார் நடத்திய தாக்குதலில் ஜே.வி.பி வேட்பாளர் பலி

(வவுனியா, ஈழம்) உள்ளூராட்சி சபைத் தேர்தல் பிற்போடப்படவுள்ளமைக்கு எதிராக ஜே.வி.பி நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பொலிஸார் நடத்திய தாக்குதலில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த நபர் ஒருவர் இன்று திங்கட்கிழமை உயிரிழந்துள்ளார். கொழும்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை முற்பகல் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தைத் தடுக்கக் கலகமடக்கும் பொலிஸார் மேற்கொண்ட கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மற்றும் குண்டாந்தடியடி ஆகியவற்றில் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஜே.வி.பியின் நிவித்திகல பிரதேச சபை வேட்பாளரான நிமல் அமரசிறி என்பவரே உயிரிழந்துள்ளார்.