நிரல்
செப். 01 22:30

வவுனியா பிரஜைகள் குழுத் தலைவர் இலங்கைப் பயங்கரவாதத் தடுப்புப் பொலிஸாரால் விசாரனைக்கு அழைப்பு

(வவுனியா, ஈழம் ) காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் வடக்கு- கிழக்கு தமிழர் தாயத்தில் தொடர்ச்சியாக நடத்தி வரும் போராட்டங்களை இலங்கை இராணுவத்தின் புலான்யவுப் பிரிவு அவதானித்து வருவதாக முறையிடப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கம் அமைத்த ஆணைக்குழுக்கள் மற்றும் விசாரனைக்குழுக்கள் முன்னிலையில் துணிந்து சாட்சியமளிக்கும் உறவினர்களும் கன்காணிக்கப்புக்கு உட்படுத்தப்பட்டதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழவிலும் மற்றும் பொது அமைப்புகளிடம் உறவினர்கள் ஏலவே முறையிட்டிருந்தனர். இந்த நிலையில் வவுனியா பிரஜைகள் குழுவின் தலைவர் கோபாலகிருஸ்ணன் ராஜ்குமாருக்கு இலங்கைப் பயங்கரவாதத் தடுப்புப் பொலிஸார் விசானைக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
செப். 01 08:13

கிழக்குக் கரைக்கு அப்பால் எண்ணெய் வள ஆய்வு ஆரம்பம்- அமெரிக்க நிறுவனத்திடம் கையளித்தது மைத்திரி-ரணில் அரசு

(மட்டக்களப்பு, ஈழம்) திருகோணமலையின் கடல் பகுதியை மையப்படுத்திய எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்கள் பற்றிய ஆய்வு நடவடிக்கைகள் நாளை ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகவுள்ளன. பனாமா நாட்டுக் கொடியுடன் இயங்கும் BGP Pioneer என்ற ஆய்வுக் கப்பல் இன்று சனிக்கிழமை கொழும்புத் துறைமுகத்திற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கையின் கிழக்குக் கரைக்கு அப்பால் அமைந்துள்ள JS5 மற்றும் JS6 ஆகிய வலயங்களில் ஐயாயிரம் கிலோ மீட்டர் நீளத்திற்குப் பயணம் செய்து, இந்தக் கப்பல் கடலடியில் உள்ள நில அதிர்வு அலைகளை ஆராயவுள்ளது. எண்ணெய் மற்றும் இயற்கை வாயு வளம் குறித்து ஆராய்வதற்காக Schlumberger என்ற பாரிய எண்ணெய் வயல் சேவை நிறுவனத்தின் கிளை நிறுவனமான Eastern Echo DMCC உடன் மே மாதம் இலங்கை ஒப்பந்தம் ஒன்றைச் செய்திருந்தது.
ஓகஸ்ட் 31 15:26

மஹிந்தவை மையப்படுத்திய கூட்டு எதிர்க் கட்சியுடன் மைத்திரியின் சுதந்திரக் கட்சி இணைய வேண்டுமென அழைப்பு

(மட்டக்களப்பு, ஈழம்) மைத்திரி- ரணில் அரசாங்கத்தில் இருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி விலக வேண்டும், இல்லையேல் கட்சியில் இருந்து ஏற்கனவே விலகிய ஏனைய 15 உறுப்பினர்களும் மஹிந்த ராஜபக்சவை மையப்படுத்திய கூட்டு எதிர்க்கட்சியுடன் இணைந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அதிகாரத்தைக் கைப்பற்றவுள்ளதாக முன்னாள் பிரதியமைச்சர் டிலான் பெரரே தெரிவித்துள்ளார். இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு டிலான் பெரேரா எச்சரிக்கையும் விடுத்துள்ளார். கட்சியின் வருடாந்த மாநாட்டுக்கு முன்னர் மைத்திரி- ரணில் அரசாங்கதில் இருந்து விலகுமாறும் மைத்திரிபால சிறிசேன அதற்கு இடமளிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஓகஸ்ட் 31 09:59

வெல்லாவெளி மருங்கையடிப் பாலம் புனரமப்புச் செய்யப்படவில்லை- வேளாண்மை பாதிப்பு என முறைப்பாடு

(மட்டக்களப்பு, ஈழம்) நூற்றுக் கணக்கான விவசாயிகள் பயன்படுத்தும் பாதை புனரமைக்கப்படாமையினால் பெரும் சிரமங்களை எதிர்நோக்குவதாக வெல்லாவெளி கண்டத்தின் விவசாய அமைப்புத் தலைவர் க.சிவப்பிரகாசம் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டம் வெல்லாவெளி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மருங்கையடிப் பகுதியில் சேதமடைந்துள்ள பாலம் புனரமைப்புச் செய்யப்படவில்லை. இதனால் சுமார் ஐநுாறு ஏக்கர் நெற்காணிகளில் நீண்டகாலமாக வேளாண்மை செய்யப்படாமல் உள்ளதாக அவர் கவலை வெளியிட்டார். கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் உட்பட இலங்கை அரசின் அமைச்சர்கள் என பலர் வந்து பார்வையிட்டுச் செல்கின்றனர். ஆனாலும் பாலம் இதுவரை புனரமைக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் எதுவுமே எடுக்கப்படவில்லை. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளதாகவும் சிவப்பிரகாசம் கூர்மை செய்தித் தளத்திற்கு கூறினார்.
ஓகஸ்ட் 30 23:21

கொழும்பிலும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஆர்ப்பாட்டப் பேரணி- செயலகத்தில் மகஜரும் கையளிப்பு

(மட்டக்களப்பு, ஈழம்) வடக்கு- கிழக்கு தமிழர் தாயகம் மற்றும் கொழும்பு அதன் புறகர் பகுதிகளில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கொழும்பில் இன்று வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர். சம உரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திலும் பேரணியிலும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களும் சிங்கள மக்கள் பலரும் கலந்துகொண்டனர். நீதியை நிலைநாட்டு, வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் விபரங்களை வெளியிடு என்ற வாசகங்கள் தமிழ் சிங்கள மொழிகளில் எழுதப்பட்டிருந்தன. காலை 10.30க்கு கொழும்புக் கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக ஆரம்பமாகிய ஆர்ப்பாட்டம் பின்னர் 11.15க்கு புகையிரத நிலையத்திலிருந்து பேரணியாக காலிமுகத் திடலில் உள்ள இலங்கை ஜனாதிபதி செயலகத்தை நோக்கிச் சென்றது.
ஓகஸ்ட் 30 15:18

மன்னாரில் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் பேரணி- சர்வதேச விசாரனை அவசியம் என வலியுறுத்தல்

(மன்னார், ஈழம்) போர்க் காலங்களில் இலங்கைப் படையினரால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் மற்றும் இறுதிப் போரின்போது இலங்கைப் படையினரிடம் சரணடைந்தும் ஒப்படைக்கப்பட்ட நிலையிலும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக சர்வதேச விசாரனை அவசியம் என வலியுறுத்தி மன்னார் நகரில் இன்று வியாழக்கிழமை கவனயீர்ப்புப் பேரணி ஒன்று நடைபெற்றுள்ளது. மன்னார், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு யாழ்ப்பாணம் ஆகிய ஐந்து மாவட்டங்களிலிருந்தும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள். மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர். அத்துடன் மன்னார் மறை மாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை மற்றும் அருட் தந்தையர்கள் பலரும் இந்தப் பேரணியில் பங்குபற்றினர்.
ஓகஸ்ட் 30 10:23

மன்னார் நீதிபதி கொழும்புக்குத் திடீர் இடமாற்றம்- இலங்கை நீதிச்சேவை ஆணைக்குழு கடிதம் அனுப்பியதாகத் தெரிவிப்பு

(மன்னார், ஈழம்) மன்னார் மாவட்ட நீதிபதி ரீ.ஜே.பிரபாகரன் முன்னறிவித்தல் மற்றும் காரணங்கள் எதுவுமேயின்றி திடீரென கொழும்பு மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் மன்னார் மாவட்ட நீதிபதியாக இலங்கை நீதிச் சேவை ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்டிருந்த நிலையில், கொழும்புக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். கடந்த நான்கு வருடங்களுக்கு முன்னர் மன்னார் நீதிபதியாக கடமையாற்றி இடமாற்றம் செய்யப்பட்டிருந்த நிலையிலேயே கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் மன்னார் மாவட்ட நீதிபதியாக மீண்டும் நியமிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் அவர் மீண்டும் காரணமின்றி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மன்னார் சட்டத்தரணிகள் கூறுகின்றனர்.
ஓகஸ்ட் 29 23:14

ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் கொழும்புத் துறைமுகத்தில் கையளித்தார்- 11 மில்லியன்கள் பெறுமதியெனத் தெரிவிப்பு

(மட்டக்களப்பு, ஈழம்) ஜப்பான் உதவியின் கீழ் பதினொரு மில்லியன் டொலருக்கும் அதிகமான பெறுமதியுடைய இரண்டு ரோந்து சேவை கப்பல்கள் இலங்கை கடல் பாதுகாப்பு திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டன. ஜப்பான் அமைச்சர் கஸுயுகி நகானே, (Kazuyuki Nakane) இன்று புதன்கிழமை அதனைக் கையளித்துள்ளார். கொழும்புத் துறைமுகத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. இலங்கைக் கடற்பிராந்திய ஆய்வு நடவடிக்கை, உயிர் காப்பாற்றும் செயற்பாடுகள், எரிபொருள் கசிவை முகாமை்ப்படுத்தல் உள்ளிட்ட பல்வேறு கடல்சார் பாதுகாப்பு செயற்பாடுகளுக்காக இந்த இரு கப்பல்களும் பயனபடுத்தப்படவுள்ளன. மூன்று நாள் பயணம் ஒன்றை மேற்கொண்டு அமைச்சர் கஸுயுகி நகானே, இலங்கைக்கு நேற்று செவ்வாய்க்கிழமை இரவு வருகை தந்தார்.
ஓகஸ்ட் 29 15:46

கிளிநொச்சியில் காயங்களுடன் இளம் பெணிண் சடலம்- சிவில் பாதுகாப்பு அதிகாரிகளின் இடுப்புப் பட்டியும் மீட்பு

(கிளிநொச்சி, ஈழம்) வடமாகாணம் கிளிநொச்சி- கரைச்சி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பன்னங்கண்டி பிரவுண் வீதியில் சுமார் 30 வயது என கருதப்படும் இளம் பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பிரவுண் வீதியில் உள்ள வயல் கால்வாயில் இருந்தே இன்று புதன்கிழமை காலை சடலம் மீட்கப்பட்டதாக பிரதேச மக்கள் தெரிவித்தனர். வயலுக்குப் பின்புறமாக உள்ள குளத்திற்கு மீன்பிடிக்கச் சென்றவர்கள் இளம் பெண் ஒருவர் உள்ளாடையுடன் சடலமாகக் கிடப்பதைக் கண்டு, இலங்கைப் பொலிஸாருக்கு அறிவித்தனர். சம்பவ இடத்திற்குச் சென்ற இலங்கைப் பொலிஸார் சடலத்தை பார்வையிட்டனர். சடலமாகவிருந்த இளம் பெண்ணுடைய முகத்தில் காயங்கள் உள்ளன. பாலியல் வல்லுறவுக்குப் பின்னர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என இலங்கைப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்
ஓகஸ்ட் 29 09:52

தையிட்டிப் பிரதேசத்தில் பலாத்காரமாக அமைக்கப்படும் விகாரைக்கு இலங்கை ஜனாதிபதி அனுமதி- மக்கள் கவலை

(யாழ்ப்பாணம், ஈழம் ) தமிழர் தாயகமான யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு தையிட்டிப் பிரதேசத்தில் இலங்கை இராணுவத்தின் உயர்பாதுகாப்பு வலயமாக இருந்து மக்களிடம் மீண்டும் கையளக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இலங்கை இராணுவத்தின் ஒத்துழைப்புடன் தையிட்டிப் பிரதேசத்தில் பலாத்காரமாக பௌத்த விகாரை அமைப்பதற்கு மக்கள் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர். யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட J/250 கிராம சேவகர் பிரிவிலுள்ள தையிட்டி தெற்கு பிரதேசத்தில் திஸ்ஸ விகாரை என்னும் பெயரில் புதிதாக விகாரை அமைப்பதற்கு இலங்கை அரசாங்கத்தின் வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரே கடந்த 22ஆம் திகதி புதன்கிழமை அடிக்கல்லை நாட்டியிருந்தார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையிலேயே அடிக்கல் நட்டப்படது.