நிரல்
ஜன. 02 21:22

ஆயுதங்களுடன் வந்த நபர் தப்பியோட்டம் - கனகராயன்குளம் முதல் புதூர் வரை விசேட அதிரப்படை, இராணுவம் தேடுதல்

(வவுனியா, ஈழம்) வவுனியா மாவட்டத்தின் புதூர் முதல் கனகராயன்குளம் வரையான பகுதியில் ஆயுதங்கள் மறைத்துவைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இலங்கை இராணுவம் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து முன்னெடுத்துள்ள சோதனை நடவடிக்கையினால் வருட ஆரம்ப நாளான நேற்று திங்கட்கிழமை முதல் தாம் அச்சமடைந்துள்ளதுடன் தமது இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் கூர்மை செய்தித் தளத்திற்கு சுட்டிக்காட்டினர்.
ஜன. 02 12:23

மட்டக்களப்பு வைத்தியசாலையில் சிங்கள மொழியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டு புத்தாண்டுப் பணிகள் ஆரம்பம்

(மட்டக்களப்பு, ஈழம்) மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற புதுவருடப் பிறப்பு நிகழ்ச்சியில் சிங்கள மொழியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டுள்ளமை தொடர்பாக வைத்தியசாலையில் கடமை புரியும் தமிழ் பேசும் அதிகாரிகள், ஊழியர்கள் அதிருப்பதியடைந்துள்ளனர். வைத்தியசாலையை சிங்கள மயமாக்கும் நடவடிக்கையா எனவும் தமிழ் வைத்தியர்கள் சிலர் கேள்வி எழுப்பினர். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்க காலத்திலிருந்து மட்டக்ககளப்பு போதனா வைத்தியசாலையில் மருத்துவர், தாதியர், சிற்றூழியர்கள் என அனைவரும் சிங்கள மொழி பேசுவர்கள் நியமிக்கப்பட்டு கடமையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஜன. 02 10:12

இலங்கைப் படையினரால் காணாமல் ஆக்கப்பட்ட இளைஞர்களின் விபரங்களை வெளியிட்ட அருட்தந்தை மில்லர் காலமானார்

(மட்டக்களப்பு, ஈழம்) கிழக்கு மாகாணம் மட்டக்களப்பில் இலங்கைப் படையினரால் காணாமல் ஆக்கப்பட்ட பல இளைர்களை மீட்பதில் பெரும்பாடுபட்டவரும், பிரஜைகள் சமாதானத்துக்கான விருது பெற்றவருமான சமூக, சிவில் செயற்பாட்டாளர் அருட்தந்தை பென்ஜமின் ஹென்ரி மில்லர் புதுவருட தினமான நேற்று செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பில் காலமானார். நீண்ட நாட்களாக சுகவீனமுற்றிருந்த அருட்தந்தை மில்லர் நேற்று அதிகாலை இறையடி சேரந்ததாகவும், இன்று புதன்கிழமை பிற்பகல் 3 மணியளவில் இறுதி ஆராதனை நடைபெறும் என்றும் புனித மிக்கேல் கல்லூரியின் அதிபர் பயஸ் ஆனந்தராஜா கூர்மைச் செய்தித்தளத்திற்குத் தெரிவித்தார்.
ஜன. 01 21:18

யாழ்ப்பாணம் - கொக்குவில் பகுதியில் தாக்குதல் நடத்த வந்த வாள்வெட்டுக்குழுவினர் பொதுமக்களால் மடக்கிப் பிடிப்பு

(யாழ்ப்பாணம், ஈழம்) யாழ்ப்பாணத்தில் அண்மைக் காலத்தில் வாள்வெட்டுத் தாக்குதல் சம்பவங்களும் அதற்கான முயற்சிகளும் தொடந்து முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில், கொக்குவில் - காந்திஜீ சனசமூக நிலைய பகுதியில் வாள்வெட்டு தாக்குதலை மேற்கொள்ளும் நோக்குடன் அப்பகுதிக்கு வந்த குழுவொன்றை அப்பிரதேச இளைஞர்கள் ஒன்றிணைந்து, வருட ஆரம்ப நாளான இன்று செவ்வாய்க்கிழமை மதியம் மடக்கிப் பிடித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஜன. 01 20:21

முல்லைத்தீவு கடற்கரையில் கரையொதுங்கிய மீன்பிடி படகு இந்தியாவுக்குச் சொந்தமானது - விசாரணையில் தகவல்

(முல்லைத்தீவு, ஈழம்) முல்லைத்தீவு கடற்கரை பகுதியில் கரையொதுங்கிய மீன்பிடி படகு இந்தியாவுக்குச் சொந்தமானதென கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை முல்லைத்தீவு கடற்கரையில் சேதமடைந்த நிலையில் கரையொதுங்கிய படகு தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்த நிலையில், இப்படகானது இந்தியாவின் ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த மீனவர்களுக்குச் சொந்தமானது என கண்டறியப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு செய்தியாளர் கூர்மை செய்தித் தளத்திற்கு தெரிவித்தார்.
ஜன. 01 07:00

உதவி வழங்கச் சென்றோருக்கு இடையூறு விளைவித்த கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட இருவர் பிணையில் விடுதலை

(கிளிநொச்சி, ஈழம்) கிளிநொச்சியில் கடந்த வாரம் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகளை வழங்குவதற்காகச் சென்ற பிரதேச செயலாளர் மற்றும் உத்தியோகத்தர்களுக்கு இடையூறு விளைவித்து அரச வாகனத்தை தடுத்து நிறுத்திய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கிளிநொச்சி - கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட இருவரையும் தலா இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான இரு ஆட்பிணைகளில் செல்லுமாறு கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டிச. 31 23:07

தமது நிலங்களிலிருந்து இராணுவத்தை வெளியேறுமாறு வலியுறுத்தி கேப்பாபுலவு இராணுவ முகாம் முன்பு மக்கள் போராட்டம்

(முல்லைத்தீவு, ஈழம்) இலங்கை இராணுவத்தினால் சர்வதேச நாடுகளின் துணையுடன் நிகழ்த்தப்பட்ட இனஅழிப்புப் போரைத் தொடர்ந்து இராணுவத்தினால் சுவீகரிக்கப்பட்டுள்ள தமது பூர்வீக நிலங்களை விடுவிக்குமாறு வலியுறுத்தி பேராட்டத்தில் ஈடுபட்டுவரும் முல்லைத்தீவு - கேப்பாபுலவு மக்களது போராட்டம் 2 வருடங்களை அண்மிக்கவுள்ள நிலையில், தமக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் இவ்வருடமும் பொய்த்துப் போயுள்ளதாகவும், தமது பூர்வீக நிலங்களிலிருந்து இராணுவத்தை வெளியேறுமாறும் வலியுறுத்தி 2018 ஆம் ஆண்டின் இறுதி நாளான இன்று கேப்பாபுலவு பிரதான பாதுகாப்பு படைத்தலைமையகம் முன்பாக ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.
டிச. 31 21:59

பிரதம பிராந்திய முகாமையாளரை இடமாற்றுமாறு வலியுறுத்தி தொழிற்சங்கப் போராட்டம்

(மன்னார், ஈழம்) இலங்கைப் போக்குவரத்து சபையின் வடபிராந்தியத்தின் பிரதம பிராந்திய முகாமையாளரை இடமாற்றுமாறு வலியுறுத்தி, வடபிராந்தியத்தில் கடமையாற்றும் ஏழு சாலை ஊழியர்களும் ஒன்றிணைந்து எதிர்வரும் 4 ஆம் திகதி தொழிற்சங்கப் போராட்டம் மேற்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
டிச. 31 12:13

ஐக்கிய தேசியக் கட்சியைத் தாங்கிப்பிடிக்கும் தமிழ்க் கூட்டமைப்பு அவர்களின் காலத்திலேயே மக்களுக்கான தீர்வைப் பெற வேண்டும்

(கிளிநொச்சி, ஈழம்) அரசியல் நெருக்கடியில் தத்தளித்த இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கத்தை தாங்கிப் பிடித்து ஐக்கிய தேசியக் கட்சிக்கு முழுமையான ஆதரவை வழங்கி அவர்களை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் தமிழ் மக்களது உரிமைகளைப் பெற்றுக்கொடுக்காவிட்டால், பின்னர் ஒருபோதும் அவர்களால் அதனைப் பெற்றுக்கொள்ள முடியாது என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவர் சுரேஸ்பிரேமச்சந்திரன் வலியுறுத்தியுள்ளார். வருட இறுதி நாளான இன்று யாழ்ப்பாணத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இந்தக் கருத்தை முன்வைத்துள்ளார்.
டிச. 31 09:59

மாணவர்களைப் பல்கலைக்கழகங்களுக்கு இணைக்கும் நடவடிக்கை விரைவில் மேற்கொள்ளப்படும்

(முல்லைத்தீவு, ஈழம்) இலங்கையில் தற்போது வெளியாகியுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளுக்கு அமைய, பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளும் நடவடிக்கை விரைவாக மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இந்த தகவலை பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் சில்வா தெரிவித்துள்ளார்.