நிரல்
ஜன. 09 14:30

மட்டக்களப்பில் அடையாளங்காணப்படாத நோயினால் கால்நடைகள் உயிரிழப்பு - திட்டமிட்டா சதியா என தொழிலாளர்கள் சந்தேகம்

(மட்டக்களப்பு, ஈழம்) மட்டக்களப்பு கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மைலத்தமடு மற்றும் பெரிய மாதவணைப் பகுதியில் கால்நடைகளுக்கென ஒதுக்கப்பட்ட மேய்ச்சல் தரை பகுதியில் உள்ள கால்நடைகள் அடையாளங்காணப்படாத தொற்றுநோயினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் அதற்கான மருந்துகளைக் கொடுத்தவுடன் அவை உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளமை அச்சத்தையும் சந்தேகத்தையும் ஏற்படத்துவதாக கால்நடை பண்ணையாளர் சங்கத்தின் செயலாளர் த.நிமலன் தெரிவித்தார்.
ஜன. 04 09:54

நீதி கோரி வடபிராந்திய இலங்கைப் போக்குவரத்துச் சபை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு - மாணவர்கள், மக்கள் வீதிகளில்

(வவுனியா, ஈழம்) வடக்கு மாகாண இலங்கைப் போக்குவரத்துச் சபை ஊழியர்களாகிய தமக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வடமாகாணத்தில் உள்ள ஏழு சாலைகளின் ஊழியர்கள் ஒன்றிணைந்து இன்று வெள்ளிக்கிழமை பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
ஜன. 04 09:15

எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்காக நீதிமன்றத்தை நாடப்போவதில்லை - எமது நோக்கம் அதுவல்ல - மாவை

(கிளிநொச்சி, ஈழம்) இலங்கையில் கடந்த வருட இறுதியில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடியினால் ஏற்பட்டிருந்த குழப்பநிலையைத் தணிப்பதற்காக என்று தெரிவித்து, இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் ஆட்சி அதிகாரங்கள் நீக்கப்பட்ட இலங்கையின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் பிரதமர் பதவிக்கு கொண்டுவருவதற்காக பாடுபட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தற்போது சம்மந்தனிடம் இருந்து மீளப்பெறப்பட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்காக போராட்டங்கள் எதனையும் நடத்தப் போவதில்லை எனவும், அதற்காக நீதிமன்றத்தை நாடப்போவதில்லை என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
ஜன. 03 19:32

முல்லைத்தீவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பத்தாயிரம் ரூபா இழப்பீடு வழங்கிவைப்பு - சபாநாயகர் வடக்குக்கு விஜயம்

(முல்லைத்தீவு, ஈழம்) வடக்கு மாகாணத்தில் பெய்த கடும் மழையினால் ஏற்பட்ட வெள்ள நிலை தற்போது சீரடைந்துள்ள நிலையில் சுமார் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் அகதி முகாம்களிலிருந்து தத்தமது வீடுகளுக்குத் திரும்பிச் சென்றுள்ள நிலையில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான பத்தாயிரம் ரூபா இழப்பீட்டுக் கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு இன்று முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
ஜன. 03 10:16

நடப்பாண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தை மார்ச் மாதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானம்

(யாழ்ப்பாணம், ஈழம்) நடப்பாண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தை எதிர்வரும் மார்ச் மாதம் 5 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது. வருடமொன்றுக்கான வரவு செலவுத் திட்டம் அதற்கு முன்னைய ஆண்டின் இறுதிக் காலாண்டில் முன்வைக்கப்பட்டு அதற்கான விவாதங்கள் இடம்பெற்று பின்னர் நிறைவேற்றப்பட்டு புதிய ஆண்டுக்கான செயற்பாடுகள் இலங்கை நிதியமைச்சின் ஊடாக நடைபெறுவது வழமை. ஆயினும் இலங்கை ஜனாதிபதியின் தன்னிச்சையான முடிவால் ஏற்பட்டிருந்த அரசியல் நெருக்கடி காரணமாக வரவு செலவுத்திட்டம் உட்பட 2019 ஆம் ஆண்டுக்கான தீர்மானங்கள் எவையும் 2018 ஆம் ஆண்டின் இறுதியில் முழுமையாக எடுக்கப்படாது அரசியல் அதிகாரத்துக்கான பதவி மோகத்தினால் அரசியல்வாதிகள் முட்டிமோதிய சம்பவமே கடந்த வருட இறுதியில் நடைபெற்றது.
ஜன. 03 09:15

நேர்மையான அதிகாரப் பகிர்வையுடைய புதிய அரசியல் யாப்பு கொண்டு வரப்பட்டால் ஆதரவு வழங்க தயார் - சம்பந்தன்

(கிளிநொச்சி, ஈழம்) மக்களும் பிராந்திய, மாகாண அரசுகளும் அதிகாரங்களைப் பயன்படுத்தும் வகையிலான நேர்மையான ஒரு அதிகாரப் பகிர்வையுடைய புதிய அரசியல் யாப்பு கொண்டு வரப்படும்போது அது நியாயமானதாக இருக்கும் பட்சத்தில் அதற்கு எமது மக்கள் ஆதரவை வழங்குவார்கள் என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினரும் ஐரோப்பிய நாடாளுமன்ற இலங்கை நட்புக்குழுவின் உறுப்பினருமான ஜெப்ரி வான் ஓர்டன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தனை நேற்று புதன்கிழமை கொழும்பில் சந்தித்தார். இச் சந்திப்பின்போதே இரா.சம்பந்தன் அவரிடம் இவ்வாறு கூறியுள்ளதாக கொழும்பு செய்தியாளர் கூர்மை செய்தித் தளத்திற்கு குறிப்பிட்டார்.
ஜன. 02 23:38

மாகாண சபைத் தேர்தல்கள் ஒத்திவைக்கப்படும் சாத்தியம் - நாடாளுமன்றத் தேர்தலை நடத்த மைத்திரி - ரணில் தரப்பு இணக்கம்

(யாழ்ப்பாணம், ஈழம் ) வடக்கு, கிழக்கு மாகாண சபைகள் உள்ளிட்ட ஒன்பது மாகாண சபைகளுக்குமான தேர்தல்களை இந்த ஆண்டின் பிற்பகுதியில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் இடம்பெறுவதாக, உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன. நாடாளுமன்றத் தேர்தலை இந்த ஆண்டின் முற்பகுதியில் நடத்துவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகிய பிரதான இரு அரசியல் கட்சிகளும் விரும்பியுள்ளதாகவும் அதற்கேற்ற முறையில் இலங்கை நாடாளுமன்றத்தில் பிரேரணை ஒன்றை சமர்ப்பித்து மூன்றில் இரண்டு பெரும்பான்மையோடு நாடாளுமன்றத் தேர்தலை நடத்த ஏற்பாடுகள் இடம்பெறுவதாகவும் கட்சித் தகவல்கள் கூறுகின்றன.
ஜன. 02 21:22

ஆயுதங்களுடன் வந்த நபர் தப்பியோட்டம் - கனகராயன்குளம் முதல் புதூர் வரை விசேட அதிரப்படை, இராணுவம் தேடுதல்

(வவுனியா, ஈழம்) வவுனியா மாவட்டத்தின் புதூர் முதல் கனகராயன்குளம் வரையான பகுதியில் ஆயுதங்கள் மறைத்துவைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இலங்கை இராணுவம் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து முன்னெடுத்துள்ள சோதனை நடவடிக்கையினால் வருட ஆரம்ப நாளான நேற்று திங்கட்கிழமை முதல் தாம் அச்சமடைந்துள்ளதுடன் தமது இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் கூர்மை செய்தித் தளத்திற்கு சுட்டிக்காட்டினர்.
ஜன. 02 12:23

மட்டக்களப்பு வைத்தியசாலையில் சிங்கள மொழியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டு புத்தாண்டுப் பணிகள் ஆரம்பம்

(மட்டக்களப்பு, ஈழம்) மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற புதுவருடப் பிறப்பு நிகழ்ச்சியில் சிங்கள மொழியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டுள்ளமை தொடர்பாக வைத்தியசாலையில் கடமை புரியும் தமிழ் பேசும் அதிகாரிகள், ஊழியர்கள் அதிருப்பதியடைந்துள்ளனர். வைத்தியசாலையை சிங்கள மயமாக்கும் நடவடிக்கையா எனவும் தமிழ் வைத்தியர்கள் சிலர் கேள்வி எழுப்பினர். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்க காலத்திலிருந்து மட்டக்ககளப்பு போதனா வைத்தியசாலையில் மருத்துவர், தாதியர், சிற்றூழியர்கள் என அனைவரும் சிங்கள மொழி பேசுவர்கள் நியமிக்கப்பட்டு கடமையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஜன. 02 10:12

இலங்கைப் படையினரால் காணாமல் ஆக்கப்பட்ட இளைஞர்களின் விபரங்களை வெளியிட்ட அருட்தந்தை மில்லர் காலமானார்

(மட்டக்களப்பு, ஈழம்) கிழக்கு மாகாணம் மட்டக்களப்பில் இலங்கைப் படையினரால் காணாமல் ஆக்கப்பட்ட பல இளைர்களை மீட்பதில் பெரும்பாடுபட்டவரும், பிரஜைகள் சமாதானத்துக்கான விருது பெற்றவருமான சமூக, சிவில் செயற்பாட்டாளர் அருட்தந்தை பென்ஜமின் ஹென்ரி மில்லர் புதுவருட தினமான நேற்று செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பில் காலமானார். நீண்ட நாட்களாக சுகவீனமுற்றிருந்த அருட்தந்தை மில்லர் நேற்று அதிகாலை இறையடி சேரந்ததாகவும், இன்று புதன்கிழமை பிற்பகல் 3 மணியளவில் இறுதி ஆராதனை நடைபெறும் என்றும் புனித மிக்கேல் கல்லூரியின் அதிபர் பயஸ் ஆனந்தராஜா கூர்மைச் செய்தித்தளத்திற்குத் தெரிவித்தார்.