நிரல்
மார்ச் 11 06:49

மன்னாரில் காணாமல் போனோருக்கான அலுவலகம் - பாதிக்கப்பட்ட தரப்பு ஏற்றுக்கொள்ளுமா என சந்தேகம்?

(மன்னார், ஈழம்) வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதை வெளிப்படுத்துமாறும் பாதிக்கப்பட்ட தமக்கு காலந்தாழ்த்தாது விரைவில் நீதி வழங்கப்பட வேண்டும் எனவும் OMP எனப்படும் காணாமல் போனோருக்கான அலுவலகம் வேண்டாம் எனவும் வலியுறுத்தி காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் தமிழர் தாயகப்பகுதிகளில் இரண்டு வருடங்களுக்கும் மேலாக தொடர் பேராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில் காணாமல் போனோர் தொடர்பான பணியகத்தின் வடக்குக்கான முதலாவது பிராந்திய அலுவலகம் எதிர்வரும் 30 ஆம் திகதி மன்னாரில் திறக்கப்படவுள்ளது.
மார்ச் 10 15:52

மூன்று தசாப்த போரின் பிடிக்குகள் சிக்கிய பெண்கள் நுண்கடன் திட்டத்திலிருந்து மீள்வது எப்போது?

(வவுனியா, ஈழம்) மூன்று தசாப்த போரின் பிடிக்குகள் சிக்கி, பல சவால்களுக்கு மத்தியில் தமிழர் தாயகமான வடக்கு கிழக்கு மாகாணங்களில் மீண்டும் மீள்குடியேறியுள்ள மக்களை இலக்குவைத்து மேற்கொள்ளப்படும் சுரண்டல் செயற்பாடுகள் கேட்பாரற்று தொடர்கின்றன. இந்நிலையில் நுண்கடன் நிதி நிறுவனங்களிடம் சித்திரவதைப்படும் பெண்களின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி வவுனியா பிரதேச செயலகத்துக்கு முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மார்ச் 10 13:17

மூன்று கோரிக்கைகளை முன்வைத்து அதிபர்கள், ஆசிரியர்கள் கவனயீர்ப்பு போராட்டம் - அணிதிரளுமாறு அழைப்பு

(கிளிநொச்சி, ஈழம்) இலங்கையில் இன அழிப்பு போர் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டதாக அறிவிக்கப்பட்டு 10 வருடங்கள் நிறைவடைந்த போதிலும் போரால் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு கிழக்கு மாகாணங்கள் முழுமையாக கட்டியெழுப்பப்படாதுள்ள நிலையில் வடக்கு, கிழக்கு உள்ளிட்ட அனைத்து மாகாணங்களிலும் கடமையாற்றும் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஒன்றிணைந்து பாரிய கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.
மார்ச் 09 23:35

சம்பந்தனுக்கு இலங்கை அரசாங்கம் வழங்கிய உயர்ந்த கெளரவம் - கொழும்பில் ஒன்றரை ஏக்கரில் ஆடம்பர வீடு

(யாழ்ப்பாணம், ஈழம் ) தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான இரா.சம்பந்தன், நல்லிணக்கத்தை ஏற்படுத்த ஒத்துழைப்பதால் இலங்கை அரசாங்கத்தால் கௌரவமாக நடத்தப்பட வேண்டும் என இலங்கை அமைச்சரவையில் விசேட பிரேரணை ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. அதற்கு எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவும் இணக்கம் தெரிவித்துள்ளார். 13 ஆம் திகதி பெப்ரவரி மாதம் 2019 அன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் முன்னிலையில் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இலங்கைக் காணி மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சு சமர்ப்பித்த பிரேரணையே ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
மார்ச் 09 14:36

மைத்திரி-மகிந்த மோதல் - பேரணியில் அதிகளவு மக்கள் பங்குபற்றவில்லை; ஜனாதிபதி வேட்பாளர் தெரிவில் இழுபறி

(யாழ்ப்பாணம், ஈழம் ) மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் மகிந்த ராஜபக்சவை மையப்படுத்திய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கும் இடையே முரண்பாடுகள் மேலும் அதிகரித்துள்ளன. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மையப்படுத்திய ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சிகள் மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் பலர், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமன கட்சியில் இணைந்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை எட்டாம் திகதி கண்டியில் இடம்பெற்ற பேரணியில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் எவரும் கலந்துகொள்ளவில்லை.
மார்ச் 09 00:02

போர்க்குற்ற விசாரணைக்கு சர்வதேச நீதிபதிகளை அனுமதியோம் - இலங்கை நாடாளுமன்றத்தில் அமைச்சர் லக்ஸ்மன்

(யாழ்ப்பாணம், ஈழம் ) போர்க்ககுற்ற விசாரணைகளை நடத்த சர்வதேச நீதிபதிகளுக்கு இலங்கை அரசாங்கம் ஒருபோதும் அனுமதியாது என அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார். போரின்போது குற்றங்கள் இழைக்கப்பட்டதாக முன்வைக்கப்படும் விசாரணைக்கு இலங்கையின் உள்ளக நீதிப் பொறிமுறை பொருத்தமானது எனறும் கேள்வி ஒன்றுக்கு அமைச்சர் பதிலளித்துள்ளார். ஜெனீவா மனித உரிமைச் சபையில் முன்வைக்கப்படவுள்ள இலங்கை தொடர்பான பிரேரணைக்கு இணை அனுசரனை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் அந்தப் பிரேரணையில் சில திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என மனித உரிமைச் சபையிடம் அரசாங்கம் கோரியுள்ளது என்றும் அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல கூறியுள்ளார்.
மார்ச் 08 10:51

ஜெனீவா மனித உரிமைச் சபையில் நம்பிக்கையிழந்த தமிழ் மக்கள் - யாழ்ப்பாணத்திற்குப் படையெடுக்கும் இராஜதந்திரிகள்

(யாழ்ப்பாணம், ஈழம் ) ஐக்கிய நாடுகள் சபையின் ஜெனீவா மனித உரிமைச் சபையின் செயற்பாடுகளில் முற்றுழுதாக நம்பிக்கையிழந்த தமிழ் மக்கள், சர்வதேச நீதிப் பொறிமுறை ஒன்றின் ஊடாக ஈழத் தமிழர்கள் விடயத்தில் கவனம் செலுத்தப்பட வேண்டுமென்ற எதிர்ப்பு மக்களிடம் காணப்படுன்றது. இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து தமிழரசுக் கட்சியை மையப்படுத்திய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு செயற்படுவதால் அரசியல் விடுதலை கிடைக்கும் என்ற நம்பிக்கையீனங்கள் அதிகரித்துள்ளன. அத்துடன் தமிழ் இனப்படுகொலைதான் நடந்தது என்பதை மூடி மறைப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக, மக்கள் மத்தியில் வலுவான சந்தேகங்களும் நிலவுகின்றன. இந்த நிலையில் கொழும்பில் உள்ள வெளிநாட்டுத் தூதுவர்கள், இராஜதந்திரிகள் வட மாகாணத்திற்குச் சென்று மக்களின் கருத்துக்களை அறிகின்றனர்.
மார்ச் 07 22:09

வரவுசெலவுத் திட்டத்தை தோற்றகடித்து ஆட்சியைக் கைப்பற்றவுள்ளதாக மகிந்த தரப்பு கூறுகின்றது

ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் சமர்ப்பித்துள்ள நடப்பு நிதியாண்டுக்கான வரவு செலவத் திட்டத்தை இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்றுக்கொள்ள்வில்லையென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சித் தகவல்கள் கூறுகின்றன. இதனால் மகிந்த ராஜபக்ச தரப்பு வரவுசெலவுத் திட்டத்தை எதிர்த்து வாக்களிக்கும்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களும் எதிர்த்து வாக்களிக்கலாமென மைத்திரிபால சிறிசேன தனக்கு நெருக்கமான மூத்த உறுப்பினர்களிடம் கூறியள்ளாார். இந்த நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் வரவுசெலவுத் திட்டத்தை தோற்கடித்து ஆட்சியைக் கைப்பற்றவுள்ளதாக மகிந்த ராஜபக்ச தரப்பு உறுப்பினர், முன்னாள் அமைச்சர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
மார்ச் 07 00:50

வடமாகாண ஆளுநர் ஜெனீவா செல்வது அதிர்ச்சியளிக்கின்றது - வலிந்து காணாலாக்கப்பட்டோரின் உறவுகள் ஆதங்கம்

(யாழ்ப்பாணம், ஈழம்) இலங்கையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற போரின் போதும் அதற்குப் பிற்பட்ட காலங்களின் போதும் இலங்கை இராணுவத்தினராலும் இராணுவத்தினருடன் இணைந்து இயங்கிய ஒட்டுக்குழுக்களினாலும் கடத்தப்பட்டுக் காணாமலாக்கப்பட்டுள்ள தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதனை வெளிப்படுத்துமாறும், காணாமலாக்கப்பட்ட தமது உறவுகள் தமக்கு மீண்டும் வேண்டும் எனவும் வலியுறுத்தி வலிந்து காணாலாக்கப்பட்டோரின் உறவினர்கள் இரண்டு வருடங்களுக்கும் மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நிலையில், வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் இலங்கை அரசாங்கத்தைப் பாதுகாப்பதற்காகவும், கால அவகாசம் கோருவதற்காகவும் ஜெனீவா செல்வது தமக்கு மிகுந்த மனவேதனையையும், அதிர்ச்சியையும் உண்டாக்குவதாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர்.
மார்ச் 06 23:30

இலங்கை அரச பிரதிநிதிகள் ஜெனீவா பயணம்- இரண்டு வருட கால அவகாசத்திற்கு மைத்திரி எதிர்ப்பு

(யாழ்ப்பாணம், ஈழம் ) ஐக்கிய நாடுகள் சபையின் ஜெனீவா மனித உரிமைச் சபையின் அமர்வில் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் விளக்கமளிக்க அமைச்சர்களான சரத் அமுனுகம, மகிந்த சமரசிங்க, வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் ஆகியோர் ஜெனீவா செல்லவுள்ளனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் விசேட ஏற்பாட்டில் இவர்கள் ஜெனீவாவுக்குப் பயணம் செய்யவுள்ளதாக இலங்கை ஜனாதிபதி செயலகத் தகவல்கள் கூறுகின்றன. ஆனால் இந்த மூன்றுபோரும் ஜெனீவா பயணம் செல்லவுள்ளமை குறித்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரையாடவில்லை என்றும் இதனால் இருவருக்குமிடையே முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.