நிரல்
மார்ச் 06 06:59

போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கண்ணிவெடி அகற்றலுக்கு நோர்வே 60 மில்லியன் குரோன் நிதியுதவி

(கிளிநொச்சி, ஈழம்) இலங்கையில் கடந்த தசாப்தங்களில் நிலவிய போர்க்காலங்களின் போது புதைக்கப்பட்ட கண்ணிவெடிகளை அகற்றும் நடவடிக்கைகளுக்கு மூன்று வருட காலப்பகுதிக்கு 60 மில்லியன் குரோன்களை வழங்குவதற்கு நோர்வே அரசாங்கம் ஒப்புதல் வழங்கியுள்ளது. இலங்கைக்கு விஜயம் செய்துள்ள நோர்வேயின் இராஜாங்க செயலாளர் மேரியன் ஹேகன் நேற்றைய தினம் இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் கொழும்பில் நடத்திய சந்திப்பின் போது இந்த விடயத்தைத் தெரிவித்ததாக கொழும்பு செய்தியாளர் குறிப்பிட்டார்.
மார்ச் 05 23:48

பத்து ஆண்டு நிறைவை முன்னிட்டு இலங்கைப் படைகளைக் கௌரவிக்க இராணுவ வருடம் பிரகடனம்- மைத்திரி ஆலோசணை

(யாழ்ப்பாணம், ஈழம் ) போர் நிறைவடைந்து பத்து ஆண்டுகள் சென்ற பின்னரும் கூட இலங்கை அரசாங்கம் உரிய முறையில் பொறுப்புக்கூறத் தவறிவிட்டதாகத் தமிழ்தரப்பு குற்றம் சுமத்தி வரும் நிலையில், ஜெனீவா மனித உரிமைச் சபை மேலும் இரண்டு வருட கால அவகாசத்தை வழங்கத் தீர்மானித்துள்ளது. ஆகவே இவ்வாறான நிலையில் ஈழத் தமிழர்களின் ஆயுதப் போராட்டத்தை அழித்த பத்து ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு இலங்கை இரவணுவத்தை கௌரவிக்கும் நோக்கில் இராணுவ நினைவு வருடத்தை பிரகடனப்படுத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுத்துள்ளார். 2019 ஆம் ஆண்டில் இருந்து இலங்கை இராணுவத்தை நினைவு கூரும் இராணுவ வருடம் பிரகடனப்படுத்தப்படும் என இலங்கை இராணுவ அதிகார சபைத் தலைவர் ஜம்மிக்க லியனகே தெரிவித்துள்ளார். இது இலங்கை மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி எனவும் அவர் கூறினார்.
மார்ச் 05 10:54

இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய போட்டியிடுவார் - கண்டியில் நடைபெறவுள்ள பேரணியில் பங்கேற்பார்

(யாழ்ப்பாணம், ஈழம் ) இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறவுள்ள இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் இலங்கையின் முன்னாள் பாதுகாப்புச் செயலாளாரும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் சகோதரருமான கோட்டாபய ராஜபக்ச ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளராக களமிறங்குவார் என கட்சித் தகவல்கள் கூறுகின்றன. கோட்டாபயவை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிப்பதில் மகிந்த ராஜபக்சவை மையப்படுத்திய ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் முரண்பாடுகள் நிலவி வந்தன. குறிப்பாக கூட்டமைப்பில் பிரதான கட்சியாக இருந்த மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் முரண்பட்டிருந்தனர்.
மார்ச் 04 23:29

ஐக்கிய தேசியக் கட்சிக்குள் குழப்பம்- ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நாடாளுமன்றக் குழுக் கூட்டம்

(யாழ்ப்பாணம், ஈழம் ) பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சிக்குள் முரண்பாடுகள் அதிகரித்துள்ளதாக கட்சித் தகவல்கள் கூறுகின்றன. நடப்பு நிதியாண்டுக்கான வரவுசெலவுத் திட்ட விவாதங்களில் கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட நேரங்கள் போதியதாக இல்லை என்று மூத்த உறுப்பினர்களுடன் வாக்குவாதப்பட்டதாகவும் கூறப்படுகின்றது. இதனால் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்றக்குழுக் கூட்டம் நாளை செவ்வாய்க்கிழமை இரவு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில கூடவுள்ளது. நடப்பு நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் ஜனாதிபதிக்குரிய நிதி ஒதுக்கீட்டை தோற்றகடிக்க வேண்டும் எனவும் கட்சியின் பின்வரிசை உறுப்பினர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
மார்ச் 04 22:14

நிவாரணம் வழங்க காணாமல் போனோர் அலுவலகம் ஏற்பாடு- அலுவலகமே வேண்டாமென்கின்றனர் உறவுகள்

(மட்டக்களப்பு, ஈழம்) வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதை வெளிப்படுத்துமாறும் பாதிக்கப்பட்ட தமக்கு காலந்தாழ்த்தாது விரைவில் நீதி வழங்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தி தமிழர் தாயகப்பகுதிகளில் இரண்டு வருடங்களுக்கும் மேலாக தொடர் பேராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில் காணாமல் போனோர் அலுவலகத்தின் இடைக்கால அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டவாறு காணாமல் போனோரின் குடும்பங்களுக்கு இடைக்கால நிவாரணம் வழங்கும் பரிந்துரை விரைவாக அமுல்படுத்தப்பட வேண்டும் என இலங்கை அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்டுள்ள காணாமல் போனோர் அலுவலகத்தின் தவிசாளர் சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.
மார்ச் 03 23:48

வடமாகாண சபையின் தீர்மானத்தை விக்னேஸ்வரன் ஜெனீவா மனித உரிமைச் சபையிடம் கையளிப்பாரா?

(யாழ்ப்பாணம், ஈழம் ) ஐக்கிய நாடுகள் சபையின் ஜெனீவா மனித உரிமைச் சபை இலங்கை அரசாங்கத்துக்கு மீண்டும் கால அவகாசம் கொடுப்பதால், எதுவும் நடந்துவிடாது என தமிழ் அரசியல் பிரதிநிதிகள் அல்லாத தமிழ்த்தரப்பு கூறுகின்றது. ஈழத் தமிழர்கள் சார்பில் இலங்கை நாடாளுமன்றத்தில் அதிகளவு நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருக்கும் தமிழரசுக் கட்சியை மையப்படுத்திய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதித் தலைவர் மாவை சேனாதிராஜா, கால அவகாசம் வழங்கக்கூடாது என்கிறார். ஆனால் கால அவகாசம் வழங்குவதே நல்லது என கூட்டமைப்பின் பேச்சாளர் சட்டத்தரணி சுமந்திரன் கூறுகின்றார். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஆதரவுடன் தான் இலங்கைக்கு கால அவகாசம் வழங்கப்படுவதாக அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல பகிரமங்கமாகவே தெரிவித்துள்ளார்.
மார்ச் 03 08:53

கொழும்பில் உள்ள இந்தியத் தூதுவர் இலங்கையின் நிலைப்பாட்டை அறிந்துகொண்டார் - பாகிஸ்தான் மௌனம்

(யாழ்ப்பாணம், ஈழம் ) இந்தியா பாக்கிஸ்தான் மோதல்கள் அதிகரித்துள்ள நிலையில் இந்திய வெளியுறவு அமைச்சு புதுடில்லியில் உள்ள வெளிநாட்டுத் தூதுவர்களை சந்தித்து விளக்கமளித்து வருகின்றது. இந்த நிலையில் கொழும்பில் உள்ள இலங்கைக்கான இந்தியத் தூதுவர் தரண்ஜித் சிங் சந்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச ஆகியோரை தனித்தனியாகச் சந்தித்து விளக்கமளித்துள்ளார். நேற்று முன்னதினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இந்த சந்திப்புத் தொடர்பாக இலங்கை அரசாங்கமோ கொழும்பில் உள்ள இந்தித் தூதரகமோ அதிகாரபூர்வமாக ஊடகங்களுக்கு எதுவும் கூறவில்லை. ஆனால் சந்திப்பு இடம்பெற்றதாக தூதரக அதிகாரிகள் கூறுகின்றனர்.
மார்ச் 01 22:28

கிளிநொச்சி ஊற்றுப்புலம் கிராமத்தைச் சேர்ந்த சிறுவன் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

(கிளிநொச்சி, ஈழம்) தமிழர் தாயகப் பகுதிகளில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரை மீட்டுத்தருமாறு வலியுறுத்தி போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் கிளிநொச்சி ஊற்றுப்புலம் கிராமத்தைச் சேர்ந்த 14 வயது சிறுவன் ஒருவன் கடந்த 24 ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக குறித்த சிறுவனின் தந்தை கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
மார்ச் 01 10:32

இலங்கை அரசாங்கம் படையினர் தொடர்பான வழக்கு விசாரணைகளை தீவிரப்படுத்தக் கடும் முயற்சி

(யாழ்ப்பாணம், ஈழம் ) ஜெனீவா மனித உரிமைச் சபையின் கூட்டத் தொடர் இந்த மாதம் ஆரம்பமாகவுள்ள நிலையில், பொறுப்புக் கூறும் விடயங்களில் அக்கறையுடன் செயற்படுவதாக இலங்கை அரசாங்கம் காண்பிக்க ஆரம்பித்துள்ளது. தமிழர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பாட்ட வழக்கு விசாரணைகள் போன்றவற்றை துரிதப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. குறிப்பாக இலங்கையின் தலைநகர் கொழும்பில் 2008/ 09ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஐந்து மாணவர்கள் உள்ளிட்ட பதினொரு தமிழர்கள் கடத்திக் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பாக இலங்கையின் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரால் வசந்த கரன்னாகொடவை கைது செய்யமாட்டோம் என்று வாக்குறுதியளிக்க முடியாதென இலங்கைச் சட்ட மா அதிபர் திணைக்களத்தின் மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் விராஜ் தயாரத்ன, பிரதம நீதியரசர் நலின் பெரேராவிடம் கூறியுள்ளார்.
பெப். 28 22:40

காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் மன்னார் மனித புதைகுழி முன் கண்டன ஆர்ப்பாட்டம் - ஐ.நாவுக்கான மகஜரும் கையளிப்பு

(மன்னார், ஈழம்) ஈழத்தில் நடத்தப்பட்ட இனஅழிப்பு போர் காலங்களில் கடத்தப்பட்டுக் காணாமலாக்கப்பட்டுள்ள தமது உறவுகள் தமக்கு மீள வேண்டும் என வலியுறுத்தி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் முன்னெடுத்துவந்த சுழற்சி முறையிலான உணவுத்தவிர்ப்புப் போராட்டம் இரண்டு வருடங்களைக் கடந்துள்ள போதிலும் இதுவரை எவ்வித பலனுமின்றிய நிலையில் கடந்த திங்கட்கிழமை கிளிநொச்சியில் இடம்பெற்ற போராட்டத்தை அடுத்து இன்றைய தினம் மன்னாரில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களது கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஐ.நா அலுவலகத்தில் கையளிக்கப்பட்டுள்ளது.