கட்டுரை: நிரல்
ஓகஸ்ட் 28 23:13

சர்வதேச நாணய நிதியத்தை இறுக்கிப் பிடிக்கும் சீனா

ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னரான இலங்கைத்தீவின் பொருளாதார நிலைமை அடுத்த இரண்டு வாரங்கள் தீர்மானமிக்கதாக அமையுமென வடமேல் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவம் மற்றும் நிதி பீடத்தின் பேராசிரியர் அமிந்த மெத்சில பெரேரா பி.பி.சி செய்திச் சேவைக்குக் கூறியுள்ளார். அதிகளவு கடன் வழங்கிய சீன அரசு, இலங்கைக்கு மேலும் கடன் வழங்கவும் வழங்கிய கடன்களை மீளப் பெறுவதற்கும் விதிக்கப்படும் நிபந்தனைகள் இலங்கைக்கு மேலும் சிரமத்தைக் கொடுத்துள்ளதாகக் கருதப்படும் நிலையில் இக் கருத்தைப் பேராசிரியர் வெளியிட்டிருக்கிறார். இப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு வேண்டுமானால், நிலையான மத்திய வங்கி வேண்டும்.
ஓகஸ்ட் 21 13:12

இலங்கைத்தீவுக்கான நல்லிணக்கத்தை மாத்திரமே நிபந்தனையாக முன்வைக்கும் சர்வதேச நாணய நிதியம்

(வவுனியா, ஈழம்) இலங்கைத்தீவின் கடன் நெருக்கடி மேலும் அதிகரித்துச் செல்லும் நிலையில், சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தம் ஒன்றைச் செய்தால் மாத்திரமே, பொருளாதார நெருக்கடியில் இருந்து குறைந்தபட்சம் மீண்டெழ முடியும். இதற்காகவே தேசிய அரசாங்கத்தை அமைக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முற்படுகிறார். தேசிய அரசாங்கத்தை அமைக்காமல் ராஜபக்சவை மையப்படுத்திய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினர்களுடன் மாத்திரம் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தை அமைத்தால், பாரிய நிதியுதவிகள் எதனையும் சர்வதேச நாணய நிதியும் வழங்காது.
ஓகஸ்ட் 13 22:49

ஜெனீவாவைக் கையாளும் புதிய அணுகுமுறை - தமிழர்களையும் உள்ளடக்கிய பொறிமுறை உருவாக்கத் திட்டம்

(வவுனியா, ஈழம்) செப்ரெம்பர் மாதம் கூடவுள்ள ஜெனீவா மனித உரிமைச் சபையில் இலங்கை தொடர்பான பிரேரணை சமர்ப்பிக்கப்படும்போது, பொறுப்புக்கூறல் விடயத்தில் இலங்கைக்குக் கூடுதல் அழுத்தங்கள் முன்வைக்கப்படலாம். ஆனால் ஈழத்தமிழர்களின் அரசியல்தீர்வு, இன அழிப்பு மற்றும் சர்வதேசம் கூறுகின்ற போர்க்குற்ற விசாரணைகள் குறித்த விடயங்கள் எதிலும் அந்த அழுத்தங்கள் இருப்பதற்கான வாய்ப்புகள் தெரியவில்லை. அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலகம், ஐரோப்பா மற்றும் இந்தியா போன்ற நாடுகள், இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும், தமக்குரிய புவிசார் அரசியல் நகர்வுகள் எந்த அடிப்படையில் இருக்க வேண்டும் என்பதைத் தீர்மானித்தே, ஜெனீவா மனித உரிமைச் சபையில் தீர்மானங்களை முன்வைப்பர் என்பது வெளிப்படை.
ஓகஸ்ட் 08 21:39

தொடரப்போகும் நிதி நெருக்கடி - சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தம் செய்ய வேண்டிய நிலை

(வவுனியா, ஈழம்) கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் ஜனாதிபதியாகப் பதவியேற்ற ரணில் விக்கிரமசிங்க, சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி மற்றும் ஐரோப்பிய மற்றும் மேற்குலக நாடுகளிடம் இருந்து தொடர்ச்சியாகப் பெருமளவு நிதியுதவிகளைப் பெறக்கூடிய சூழல் அருகிக் கொண்டே செல்கின்றது. ரசிய - உக்ரெய்ன் போரினால், தற்போது பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள சர்வதேச நாடுகள் குறிப்பாக ரசியாவுக்கு எதிரான நாடுகள் உக்ரெய்ன் நாட்டை எப்படி மீளக் கட்டியெழுப்புவது என்பதிலேயே கூடுதல் கவனம் செலுத்தியுள்ளன. ரசியாவுக்கு எதிரான போருக்கு உக்ரெய்ன் நாட்டுக்கு உதவியளிப்பதிலும் இந்த நாடுகளின் கவனம் மேலோங்கியுள்ளது.
ஜூலை 21 22:51

இறைமையைப் பாதுகாக்கும் ரணில்- தமிழ்த்தரப்புச் செய்ய வேண்டியது என்ன?

(வவுனியா, ஈழம்) ஓற்றையாட்சியைப் பாதுகாக்கும் இலங்கை அரசியல் யாப்பின் பிரகாரம் எவர் ஜனாதிபதியாகப் பதவியேற்றாலும், வடக்குக் கிழக்குத் தமிழர்களின் அரசியல் விடுதலைக்குரிய ஏற்பாடுகளை மேற்கொள்ள முடியாது. இலங்கை அரசியல் யாப்பைப் பாதுகாப்பேன் என்று கூறியே ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகப் பதவிப் பிரமாணம் செய்துள்ளார். அரசியல் யாப்பைப் பாதுகாப்பது என்பது பௌத்த சமயத்துக்கு முன்னுரிமை கொடுக்கும் ஒற்றையாட்சி முறையைக் குறிக்கும். பதவிப் பிரமாணம் முடிந்த கையோடு, பாதுகாப்பு அமைச்சுக்குச் சென்று, முப்படைத் தளபதிகளைச் சந்திக்கிறார் ரணில். பௌத்த விகாரைக்குச் செல்கிறார். இவைதான் ஒற்றையாட்சி அரசியல் யாப்பைப் பாதுகாக்கும் ஜனாதிபதியின் முதற் கடமை என்பதை ரணில் தனது செயற்பாட்டின் மூலம் தெளிவாக எடுத்துக் காட்டுகிறார்.
ஜூலை 14 11:55

காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்ளும் வகையில் தமிழ்த்தேசிய அரசியல் பிரகடனம் மேற்கொள்ளப்பட வேண்டிய தருணம் இது

(வவுனியா, ஈழம்) கோட்டாபய ராஜபக்சவைப் பதவி விலகுமாறு கோரி தென் இலங்கையில் நடத்தப்பட்ட போராட்டங்களை ஒரு கிளர்ச்சியின் வெளிப்பாடுகளாக மட்டுமே ஈழத்தமிழர்கள் அணுக வேண்டும். அந்தக் கிளர்ச்சியானது ஓர் அரசியல் புரட்சி அல்ல என்ற புரிதல் இங்கு அவசியமாகிறது. புரட்சி என்றால் ஏதேனும் ஒரு கொள்கையோடு நடத்தப்பட்டிருக்க வேண்டும். இங்கே கிளர்ச்சியாளர்கள் பொருளாதார நெருக்கடி, எரிபொருட்கள் இல்லாமை போன்ற காரணங்களை முன் நிறுத்தி கோட்டாபயவுக்கு எதிரான கிளர்ச்சிகளை நடத்தியுள்ளனர். இக் கிளர்ச்சி கடந்த சனிக்கிழமை ஒன்பதாம் திகதியன்று மேலும் ஒரு தற்காலிக வெற்றியைப் பெற்றுக் கொண்டது. ஆனால், இந்தக் கிளர்ச்சியை இயக்கியவர்களால் ஓர் அரசியல் புரட்சியாக இதனை மாற்ற முடியாமல் போனதை ஈழத்தமிழர்கள் இரண்டு காரணங்கள் ஊடாக நோக்க வேண்டும்.
ஜூலை 11 11:02

அமெரிக்க - இந்திய அரசுகளிடையேயான பனிப்போர் இலங்கை விடயத்தில் தாக்கம் செலுத்தவில்லை

(வவுனியா, ஈழம்) ரசிய- உக்ரெய்ன் போரினால் அமெரிக்க - இந்திய அரசுகளுக்கிடையே பனிப்போர் மூண்டுள்ளது என்பது உண்மை. ஆனால் இந்த இரு நாடுகளும் இலங்கை விவகாரத்தில் ஒரே புள்ளியில் நின்றுதான் செயற்படுகின்றன என்பதைக் கூர்மைச் செய்தித் தளம் பல தடவை கூறியிருக்கின்றது. குறிப்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அமெரிக்கச் சார்புடையவர் என்பதும், இந்தியாவுடனான இலங்கையின் உறவுகூட அமெரிக்காவுக்கும் விருப்பமான நகர்வுதான் என்பதும் வெளிப்படை. சனிக்கிழமை நடைபெற்ற போராட்டத்தின் மூலம் கோட்டாபய ராஜபக்ச பதவி விலக முடிவெடுத்தாலும், அடுத்த வரவுள்ள ஜனாதிபதிகூட அமெரிக்க - இந்தியச் சார்புப் போக்கைக் கையாள வேண்டும் என்ற சமிக்ஞைகள் வழங்கப்பட்ட நிதியுதவிகள் மூலம் கன கச்சிதமாக நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.
ஜூன் 16 00:05

பொருண்மிய நெருக்கடியையும் பயன்படுத்திப் பொறுப்புக்கூறலில் இருந்து இலங்கையை முற்றாக விடுவிக்க பீரிஸ் முழு முயற்சி

(கிளிநொச்சி, ஈழம்) பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வுப் பிரச்சினைகளுக்குள், ஈழத்தமிழர் விவகாரத்தை ஐ.நா. மனிதவுரிமைப் பேரவையில் இருந்து கனகச்சிதமாக நீக்கிவிடச் செய்யும் முனைப்பில், உண்மைக்கு மாறான திரிபுபடுத்திய தகவல்களை ஐம்பதாவது கூட்டத் தொடரில் இலங்கை ஒற்றையாட்சி அரசின் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் 13 ஜூன் திங்களன்று உரையாற்றும்போது முன்வைத்திருக்கிறார். ரணில் விக்கிரமசிங்க பிரதமர் பதவியை வகிக்கும் பின்னணியில், சா்வதேச தரப்புகள் தமது வாதங்களை 2002 பேச்சுவார்த்தைக் காலத்தைப்போல நம்பும் என்ற எதிர்பார்ப்போடு அமைச்சர் பீரிஸ் பொறுப்புக்கூறல், சாட்சியப் பொறிமுறை பற்றிய கருத்துகளை கடும் தொனியில் வெளிப்படுத்தியிருக்கிறார். இது முன்னரைப் போலன்றி இம்முறை ஈழத்தமிழர்களுக்கு மிக ஆபத்தான வியூகமாகிறது.
ஜூன் 13 22:27

ஒற்றையாட்சி அரசின் நாடாளுமன்றத்தில் இந்திய எதிர்ப்பு

(வவுனியா, ஈழம்) இலங்கைத்தீவில் ஏற்பட்டுள்ள பொருளாதார, விலைவாசி உயர்வுப் பிரச்சினைகளை மையமாகக் கொண்டு அமெரிக்க- இந்திய அரசுகள் தமது புவிசார் நலன்களைப் பெறும் திட்டங்களையே செயற்படுத்த முற்படுகின்றன என்பதை நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற வாதப்பிரதிவாதங்களின்போது அறிந்துகொள்ள முடிந்தது. இலங்கைத்தீவில் மின் சக்தி எரிசக்தித் திட்டத்தை இந்தியாவின் அதானி குழுமத்திடம் கையளிக்கும் யோசனைக்கு ஜே.வி.பி எதிர்ப்பு வெளியிட்டுள்ளது. சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி நேரடியாக எதிர்ப்பு வெளியிடவில்லை. ஆனாலும் அதானி நிறுவனம் தொடர்பாக சஜித் பிரேமதாசாவின் கட்சி முன்வைக்கும் விமர்சனம், இந்தியாவை இலங்கைக்குள் அனுமதிக்கக் கூடாது என்ற செய்தியைப் பகிரங்கப்படுத்துகின்றது.
ஜூன் 09 10:59

இந்தியத் தூதரக, புலம்பெயர் உதவியின் மத்தியிலும் யாழ் வைத்தியசாலையின் மருந்துக்கையிருப்பு ஊசலாட்டம்

இலங்கைத் தீவைக் கடுமையாகத் தாக்கியுள்ள பொருண்மிய நெருக்கடிக்குள், குறிப்பாக மருந்துக்கொள்வனவுக்கான அந்நியச் செலாவணித் தட்டுப்பாட்டின் மத்தியில், இந்திய தூதரகத்தின் ஊடான உதவியூடாக ஓரளவு மருந்துவகைகள் கிடைக்கப்பெற்றுள்ளமையோடும், புலம்பெயர்ந்துவாழும் கொடைக்குணமுள்ளோரின் உதவியோடு தீவுக்குள்ளேயே அடிப்படைத் தேவைக்கான கையிருப்புகளைக் கொள்வனவு செய்தும், தனது அடிப்படை மருந்துக் கையிருப்பை யாழ் போதனா வைத்தியசாலை மயிரிழையில் சமாளித்துவருகிறது. மாத அடிப்படையில் அன்றி வாராந்த அடிப்படையில் கையிருப்பை இதுவரை நுட்பமாகக் கையாண்டு வந்த போதிலும் பெருத்த சவாலை வைத்தியசாலை எதிர்கொள்வதாக யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர், வைத்திய கலாநிதி கே. நந்தகுமாரை கூர்மை தொடர்பு கொண்டபோது அவர் விரிவாக எடுத்தியம்பினார்.