நிரல்
ஜூன் 03 22:25

மட்டக்களப்பு கிரானில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நடத்திய பத்துப்பேருக்கும் விளக்கமறியல் நீடிப்பு

(மட்டக்களப்பு, ஈழம் ) கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு, வாழைச்சேனை பிரதேசத்திலுள்ள கடற்கரையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை நடத்திய 10 பேரையும், எதிர்வரும் 16ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு, இலங்கை ஒற்றையாட்சி அரசின் வாழைச்சேனை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த மே மாதம் 18 ஆம் திகதி இவர்கள் நினைவேந்தல் நிகழ்வை நடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். இது தொடர்பான வழக்கு இன்று வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போதே, நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
ஜூன் 02 21:47

பொதுமுடக்கம் 14 ஆம் திகதிவரை நீடிப்பு- அரசாங்கம் அறிவிப்பு

(வவுனியா, ஈழம்) இருவாரங்களாக அமுல்படுத்தப்பட்டிருக்கும் பொது முடக்கம் எதிர்வரும் 7 ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 4 மணிக்கு நீக்கப்படுமென எதிர்ப்பார்க்கப்பட்டிருந்த நிலையில், எதிர்வரும் 14 ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 4 மணிவரை நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பயணக் கட்டுபாடு என இலங்கை அரசாங்கத்தால் கூறப்படும் இந்த பொதுமுடக்க அறிவிப்பு, 14 ஆம் திகதிவரை நீடிக்கப்பட வேண்டுமென சுகாதார சேவை அமைப்புகள் விடுத்த வேண்டுகோளுக்கு ஏற்ப நீடிக்கப்பட்டதாக அரசாங்கம் கூறுகின்றது.
ஜூன் 01 21:21

போரினால் பாதிக்கப்பட்ட வடமாகாண மீனவக் குடும்பங்களுக்கு மேலும் நெருக்கடி

(மன்னார், ஈழம் ) கொவிட்-19 நோய் தொற்று பரவல் காரணமாக இலங்கை அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்பட்டுள்ள இலங்கைத்தீவு முழுவதிலுமான பயணத்தடை காரணமாக வட மாகாணத்தைச் சேர்ந்த சுமார் 15500 தமிழ் பேசும் மீனவக் குடும்பங்கள் தமது நாளாந்த வருமானத்தை இழந்து அன்றாட உணவிற்கு அல்லலுரும் நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கை மீனவர் ஒத்துழைப்பு பேரவையின் மன்னார் மாவட்ட இணைப்பாளர் அந்தோணி பெனடிட் குரூஸ் கூர்மைச் செய்தித் தளத்திற்கு தெரிவித்தார். வடமாகாண மீனவக் குடும்பங்கள்
ஜூன் 01 20:04

பேசாலை, தலைமன்னார் மீனவர்கள், தமிழக மீனவர்களுடன் தொடர்பு- கொரோனா பரவக் காரணமென்று குற்றச்சாட்டு

(மன்னார், ஈழம் ) வட மாகாணம் மன்னார் மாவட்டத்தின் பேசாலை மற்றும் தலைமன்னார் பகுதி கடற்பரப்பில் சட்டவிரோதமாக நுழைந்து கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபடும் இந்திய மீனவர்களுடன் தொடர்புகளை பேணும் உள்ளூர் மீனவர்கள் சிலரினால் மன்னார் மாவட்டம் உட்பட முழு இலங்கையிலும் இலகுவாக கொவிட் - 19 நோய் தொற்று பரவும் ஆபத்து ஏற்பட்டுள்ளதென சுகாதார அதிகாரிகள் கூர்மை செய்தித் தளத்திற்கு தெரிவித்தனர். தற்பொழுது மன்னார் மாவட்டத்தில் மீனவர்கள் சிலர் கொவிட் -19 நோய்த் தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட நிலையில் இந்திய மீனவர்களுடனான கடத்தல் சகவாசமே குறித்த மீனவர்களின் நோய் தொற்றுக்கு காரணம் என சந்தேகிக்கப்படுவதாக அவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.
மே 31 20:29

யாழ்ப்பாணத்தில் அதிகரிக்கும் கொவிட்-19. மரணிப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் உயர்வு

(யாழ்ப்பாணம், ஈழம்) தமிழர் தாயகமான வட மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் கொவிட் - 19 நோய் தொற்றாளர்கள் தினமும் அடையாளம் காணப்படும் நிலையில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அடையாளம் காணப்படும் தொற்றாளர்களின் எண்ணிக்கை தினமும் உயர்வடைவதுடன் கொரோனாவில் மரணமடைபவர்களின் தொகையும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் இலங்கை அரசாங்கத்தினால் யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கு அனுப்பிவைக்கப்பட்ட கொவிட் தடுப்பூசிகளை பொது மக்களுக்கு செலுத்தும் பணிகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆரம்பிக்கப்பட்ட நிலையில் அன்றைய தினமே 2948 தடுப்பூசிகள் பொது மக்களுக்குச் செலுத்தப்பட்டதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஏ. கேதிஸ்வரன் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
மே 31 15:32

கொரோனா பரவலைத் தடுக்க அரசாங்கம் தவறியுள்ளது- ராஜபக்சவுக்கு ஆதரவான பௌத்த தேரர்கள் குற்றச்சாட்டு

(வவுனியா, ஈழம்) இலங்கைத் தீவில் வேகமாகப் பரவி வரும் கொரோனாவின் மூன்றாவது அலையை கட்டுப்படுத்துவதற்கு சுகாதாரத் துறையினர் வழங்கிய அறிவுறுத்தல்களை அலட்சியம் செய்ததுடன் உரிய நேரத்தில் தேவையான நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் எடுக்கத் தவறியதால் நாடளாவிய ரீதியில் தினமும் ஆயிரக்கணக்கான புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுவதுடன் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் நாளாந்தம் அதிகரிப்பதாக பௌத்த தேரர்களான முருத்தெட்டுவ ஆனந்த தேரர் மற்றும் அக்மீமன தயாரத்ன தேரர் ஆகியோர் குற்றம் சாட்டியுள்ளனர்.
மே 29 19:48

கிளிநொச்சி, மன்னார் மாவட்டங்களில் விவசாயிகள், மீனவர் பாதிப்பு

(கிளிநொச்சி, ஈழம்) வட மாகாணத்தின் கிளிநொச்சி மற்றும் மன்னார் மாவட்டங்களில் கடந்த திங்கள் மற்றும் செவ்வாய் ஆகிய தினங்களில் ஏற்பட்ட யாஸ் புயல் தாக்கத்தினால் தோட்டச் செய்கையாளர்களும் மீனவர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கிளிநொச்சி மாவட்டத்தில் விவசாயிகளும் மன்னார் மாவட்டத்தில் மீனவர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக அம் மாவட்டங்களின் செயலக அதிகாரிகள் கூர்மைச் செய்தித் தளத்திற்கு தெரிவித்தனர்.
மே 28 20:28

போட் சிற்றிச் சட்டமூலத்துக்கு சபாநாயகர் கைச்சாத்திட்டார்

(வவுனியா, ஈழம்) கொழும்பு போட் சிற்றி என அழைக்கப்படும் கொழும்பு சர்வதேச வர்த்தக நிதி நகரத்தைக் கையாள்வதற்காக இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்ட மூலத்துக்கு சபாநாயகர் மகிந்த யாப்பா அபயவர்த்தன இன்று கையொப்பமிட்டுள்ளார். நேற்று வியாழக்கிழமையில் இருந்து சட்டமூலம் நடைமுறைக்கு வருமென அரசாங்கத் தகவல்கள் கூறுகின்றன. சட்டமூலம் கைச்சாத்திடப்பட்டபோது சீனத் தூதரக அதிகாரிகள் சிலரும் சமுகளித்திருந்ததாகக் கொழும்பு உயர்மட்ட அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. ஏற்கனவே சீனச் சட்ட அறிஞர்குழு ஒன்று கொழும்புக்கு வருகை தந்துள்ள நிலையில் இன்று சட்டமூலத்துக்குச் சபாநாயகர் கைச்சாத்திட்டுள்ளார்.
மே 27 19:12

றிஷாத் பதியூதீன் விடுவிக்கப்பட வேண்டுமென வலியுறுத்தி கண்டனப் பிரேரணைகள்

(வவுனியா, ஈழம்) இலங்கையின் முன்னாள் அமைச்சர் றிஷாத் பதியூதீன் மற்றும் அவரின் சகோதரர் றியாஜ் பதியூதீன் ஆகியோர் பயங்கரவாதத் தடைச்சட்டத்தில் கைதாகி கடந்த திங்கள்கிழமை 24ஆம் திகதியுடன் ஒரு மாதம் கழிந்துள்ள நிலையில் இலங்கையில் உள்ள பல உள்ளூராட்சி சபைகளில் றிஷாத் பதியூதீனின் கைது தொடர்பில் பல கண்டனப்பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இலங்கை பயங்கரவாதத் தடுப்பு பொலிஸ் பிரிவினரால் றிஷாத் பதியூதீனும் அவருடை சகோதரர் றியாஜ் பதியூதீனும் உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கடந்த ஏப்பிரல் 24ஆம் திகதி அதிகாலை கொழும்பில் உள்ள அவர்களின் வீடுகளில் வைத்துக் கைது செய்யப்பட்டு தற்பொழுது தொடர்சியான விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.
மே 26 20:38

மன்னார், கிளிநொச்சியில் இரண்டு நாட்களில் இரு சடலங்கள் மீட்பு

(கிளிநொச்சி, ஈழம்) வட மாகாணத்தில் மன்னார் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் கடந்த இரண்டு தினங்களில் இரண்டு சடலங்களை இலங்கைப் பொலிஸார் மீட்டுள்ளனர். மன்னார் தாழ்வுபாடு கடற்கரையில் ஒரு சடலமும் கிளிநொச்சி கோவிந்தன் கடைச் சந்திப்பகுதியில் உள்ள நீர் வாய்காலொன்றில் இருந்து ஒரு சடலமும் பொலிஸாரினால் மீட்க்கப்பட்டுள்ளது. மன்னார் தாழ்வுபாடு கடற்கரைப் பகுதியில் கடந்த திங்கள்கிழமை மாலை ஆண்ணொருவரின் சடலம் கரையொதுங்கிய நிலையில் பொதுமக்களினால் மன்னார் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. இந்த நிலையில் பொலிஸாரும் சட்ட வைத்திய அதிகாரியும் தாழ்வுபாட்டில் கரையொதுங்கிய சடலத்தை செவ்வாய் அன்று பார்வையிட்டதுடன் குறித்த சடலத்தை உடற்கூற்றுப் பரிசோதனைக்காக மன்னார் பொது வைத்தியசாலையில் கையளித்துள்ளனர்.