நிரல்
ஜூலை 21 22:51

இறைமையைப் பாதுகாக்கும் ரணில்- தமிழ்த்தரப்புச் செய்ய வேண்டியது என்ன?

(வவுனியா, ஈழம்) ஓற்றையாட்சியைப் பாதுகாக்கும் இலங்கை அரசியல் யாப்பின் பிரகாரம் எவர் ஜனாதிபதியாகப் பதவியேற்றாலும், வடக்குக் கிழக்குத் தமிழர்களின் அரசியல் விடுதலைக்குரிய ஏற்பாடுகளை மேற்கொள்ள முடியாது. இலங்கை அரசியல் யாப்பைப் பாதுகாப்பேன் என்று கூறியே ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகப் பதவிப் பிரமாணம் செய்துள்ளார். அரசியல் யாப்பைப் பாதுகாப்பது என்பது பௌத்த சமயத்துக்கு முன்னுரிமை கொடுக்கும் ஒற்றையாட்சி முறையைக் குறிக்கும். பதவிப் பிரமாணம் முடிந்த கையோடு, பாதுகாப்பு அமைச்சுக்குச் சென்று, முப்படைத் தளபதிகளைச் சந்திக்கிறார் ரணில். பௌத்த விகாரைக்குச் செல்கிறார். இவைதான் ஒற்றையாட்சி அரசியல் யாப்பைப் பாதுகாக்கும் ஜனாதிபதியின் முதற் கடமை என்பதை ரணில் தனது செயற்பாட்டின் மூலம் தெளிவாக எடுத்துக் காட்டுகிறார்.
ஜூலை 20 22:45

ரணில் தெரிவானாலும், போராட்டம் தொடருமென அறிவிப்பு

(வவுனியா, ஈழம்) ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டாலும், ரணில் விக்கிரமசிங்க பதவி விலகும் வரை போராட்டங்கள் தொடருமென காலிமுகத்திடல் போராட்டக்குழு அறிவித்துள்ளது.ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்று நாடாளுமன்றத்தில் புதன்கிழமை நண்பல் அறிவிக்கப்பட்டது. அடுத்த ஒரு மணிநேரத்தில் வெளியான உயர்நீதிமன்ற அறிவிப்பில், காலிமுகத்திடல் பகுதியில் உள்ள எஸ்.எடபிள்யு.ஆர்.டி .பண்டாரநாயக்காவின் சிலைக்கு அருகில் நின்று போராடும் இளைஞர்கள் சிலையில் இருந்து சுமார் ஐம்பது மீற்றர் தூர இடையில் ஒன்று கூடுவதைத் தவிர்க்குமாறு கூறப்பட்டுள்ளது. குறிப்பாகப் பொதுமக்கள் ஒன்றுகூடுவதை தவிர்க்க வேண்டுமென உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜூலை 20 00:12

இடைக்கால ஜனாதிபதித் தெரிவு- தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ராஜபக்சவின் கட்சி வேட்பாளரை ஆதரிக்க முடிவு

(வவுனியா, ஈழம்) ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனக் கட்சி வேட்பாளர் டளஸ் அழகப் பெருமாவை ஆதரிக்க தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. கொழும்பில் புதன்கிழமை இரவு இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் இந்த முடிவை கூட்டமைப்பின் பேச்சாளர் சட்டத்தணி சுமந்திரன் அறிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, மொட்டுக் கட்சி வேட்பாளர் டளஸ் அழகபெருமா. பேராசிரியர் ஜீ.எல். பீாிஸ் உள்ளிட்ட பலர் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களைச் சந்தித்து உரையாடியுள்ளனர். சம்பந்தன், சுமந்திரன், சித்தாத்தன், செல்வம் அடைக்கலநாதன் உள்ளிட்ட மூத்த உறுப்பினர்கள் பலரும் சந்திப்பில் பங்குபற்றியிருந்தனர்.
ஜூலை 19 16:11

ஜனாதிபதித் தெரிவுக்கு மூவர் போட்டி- சஜித் விலகினார்

(யாழ்ப்பாணம், ஈழம்) இலங்கை ஒற்றையாட்சி நாடாளுமன்றத்தில், புதன்கிழமை இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தெரிவுக்கான வாக்கெடுப்பில் மூன்பேர் போட்டியிடுகின்றனர். தற்போது பதில் ஜனாதிபதியாகவுள்ள ரணில் விக்கிரமசிங்க, ஸ்ரீலங்காபொதுஜன பெருமனக் கட்சியின் மூத்த உறுப்பினர் டளஸ் அழகபெரும ஜே.வி.பி எனப்படும் மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கா ஆகியோர் போட்டியிடவுள்ளனர். செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற வேட்புமனுத் தாக்கலில், நாடாளுமன்ற பொதுச் செயலாளர் தம்மிக்க தசநாயக்க தெரிவாத்தாட்சி அதிகாரியாகச் செயற்பட்டார்.
ஜூலை 17 23:34

ஜனாதிபதித் தெரிவுக்கான வாக்கெடுப்பு- நால்வர் போட்டி

(வவுனியா, ஈழம்) இலங்கை ஒற்றையாட்சி அரசின் எட்டாவது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியை தெரிவுசெய்வதற்கான வாக்கெடுப்பு எதிர்வரும் இருபதாம் திகதி புதன்கிழமை நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளது. தேர்தலில் போட்டியிடுவதற்கு நான்கு உறுப்பினர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். தற்போதைய பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மூத்த உறுப்பினர் முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெரும, ஜே.வி.பி என்படும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க ஆகியோரே போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
ஜூலை 15 23:03

ஜனாதிபதிப் பதவிக்கு ரணிலை எதிர்த்து சஜித், டளஸ் போட்டியிட முடிவு

(வவுனியா, ஈழம்) ஜனாதிபதிப் பதவிக்குக் கடும் போட்டி நிலவுகின்றது. ரணில் விக்கிரமசிங்க பதில் ஜனாதிபதியான நிலையில், எதிர்வரும் 20 ஆம் திகதி புதன்கிழமை நடைபெறவுள்ள வாக்கெடுப்பின்போது ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி வாக்களிக்குமென அதன் செயலாளர் சாகர காரியவன்சம் வெள்ளிக்கிழமை பிற்பகல் தெரிவித்திருந்தார். ஆனால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனக் கட்சியின் சார்பில் மூத்த உறுப்பினர் டளஸ் அழகபெருமாவை வேட்பாளராக நிறுத்தவுள்ளதாக பெரமுனக் கட்சியின் தலைவர் பேராசிரியர் பீரிஸ் வெள்ளிக்கிழமை மாலை அறிவித்திருந்தார்.
ஜூலை 14 11:55

காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்ளும் வகையில் தமிழ்த்தேசிய அரசியல் பிரகடனம் மேற்கொள்ளப்பட வேண்டிய தருணம் இது

(வவுனியா, ஈழம்) கோட்டாபய ராஜபக்சவைப் பதவி விலகுமாறு கோரி தென் இலங்கையில் நடத்தப்பட்ட போராட்டங்களை ஒரு கிளர்ச்சியின் வெளிப்பாடுகளாக மட்டுமே ஈழத்தமிழர்கள் அணுக வேண்டும். அந்தக் கிளர்ச்சியானது ஓர் அரசியல் புரட்சி அல்ல என்ற புரிதல் இங்கு அவசியமாகிறது. புரட்சி என்றால் ஏதேனும் ஒரு கொள்கையோடு நடத்தப்பட்டிருக்க வேண்டும். இங்கே கிளர்ச்சியாளர்கள் பொருளாதார நெருக்கடி, எரிபொருட்கள் இல்லாமை போன்ற காரணங்களை முன் நிறுத்தி கோட்டாபயவுக்கு எதிரான கிளர்ச்சிகளை நடத்தியுள்ளனர். இக் கிளர்ச்சி கடந்த சனிக்கிழமை ஒன்பதாம் திகதியன்று மேலும் ஒரு தற்காலிக வெற்றியைப் பெற்றுக் கொண்டது. ஆனால், இந்தக் கிளர்ச்சியை இயக்கியவர்களால் ஓர் அரசியல் புரட்சியாக இதனை மாற்ற முடியாமல் போனதை ஈழத்தமிழர்கள் இரண்டு காரணங்கள் ஊடாக நோக்க வேண்டும்.
ஜூலை 13 23:19

நாடாளுமன்றத்தை முற்றுகையிட போராட்டக்காரா்கள் முயற்சி- பொலிஸாருடனான் மோதலில் 45 பேர் காயம்

(வவுனியா, ஈழம்) கொழும்பில் இன்று நள்ளிரவுவரை தொடர்ச்சியான போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. நாடாளுமன்றத்திற்கு அருகாக உள்ள சபாநாயகரின் இல்லத்தைக் கைப்பற்ற முற்பட்டபோது பெரும் மோதல் ஏற்பட்டது. சுமார் 45 பேர் காயமடைந்து கொழும்புத் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நாடாளுமன்ற வளாகத்தைச் சுற்றி முப்படைனரும் பெரும் எண்ணிக்கையில் குவிக்கப்பட்டுள்ளனர். கலகமடக்கும் பொலிஸார் கண்ணீர்புகைக் குண்டுத் தாக்குதல்களையும் நீர்த்தாரைப் பிரயோகத்தையும் மேற்கொண்டபோதும், போராட்டக் குழு எதிர்த்து நின்று முன்னோக்கிச் செல்கின்றது.
ஜூலை 12 15:15

சிங்கள - பௌத்த தேசிய சக்தி, ராஜபக்ச குடும்பத்திடம் இல்லாமல் போனதாலேயே துரத்தப்பட்டதாக மார் தட்டுகிறார் ஓமல்பே தேரர்

(கிளிநொச்சி, ஈழம்) சிங்கள, பௌத்த அதிகாரத்தை எவராலும் இல்லாதொழிக்க முடியாது. அது நிலையானது என்று கலாநிதி ஓமல்பே சோபித தேரர் செவ்வாய்க்கிழமை கொழும்பில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். சிங்கள,பௌத்த அதிகாரம் நிலையானது. என்பதே யதார்த்தமான உண்மையும்கூட என்று கூறிய தேரர், சிங்கள, பௌத்த அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியே கோட்டாபய ராஜபக்ச ஆட்சிக்கு வந்ததாகவும், அதனாலேயே அவரைப் பதவி விலக வைப்பதற்குச் சிங்கள, பௌத்த சக்திகள் முன்னின்று செயற்பட்டதாகவும் தெரிவித்தார். ராஜபக்ச குடும்பம் பயன்படுத்திய சிங்கள, பௌத்ததேசிய சக்தி இத்துடன் முடிந்துவிட்டதாகவும் தேரர் கூறினார்.
ஜூலை 12 11:48

போராட்டம் நடத்திய இளைஞர் குழுக்களிடையே மோதல், பொலிஸார் ஒருவர் உயிரிழப்பு- அலரிமாளிகைக்குள் சம்பவம்

(வவுனியா, ஈழம்) கோட்டாபய ராஜபக்சவை பதவி விலகுமாறு கோரி போராட்டம் நடத்தி வரும் குழுக்களிடையே ஏற்பட்ட மோதலில் சுமார் பத்துப்பேர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்த பொலிஸ் உத்தியோகஸ்தார் ஒருவர் சிகிச்சை பலனின்றிப் பின்னர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். பிரதமரின் அலரி மாளிகையில் தங்கியுள்ள போராட்டக்குழுக்களே மோதலில் ஈடுபட்டதாகவும் இரண்டு குழுக்களிடையே ஏற்பட்ட மோதலில் பெண் ஒருவரின் கழுத்து வெட்டப்பட்டதாகவும் பொலிஸார் கூறினர். செவ்வாய்க்கிழமை அதிகாலை இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஜே.வி.பி எனப்படும் மக்கள் விடுதலை முன்னணியின் ஆதரவாளர்களுக்கும் போராட்டக்குழுவின் மற்றுமொரு பகுதியினருக்குமிடையே மோதல் இடம்பெற்றதாகச் சம்பவத்தை நேரில் பார்த்த சிலர் தெரிவித்தனர்.