நிரல்
பெப். 28 21:36

முல்லைத்தீவில் திடீர் சுற்றிவளைப்பு - சட்டவிரோத மீன்பிடி உபகரணங்கள் வைத்திருந்த குற்றச்சாட்டில் இருவர் கைது

(முல்லைத்தீவு, ஈழம்) முல்லைத்தீவில் தேசிய நீர் உயிரினச் செய்கை அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து இன்று வெள்ளிக்கிழமை மாலை மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு குளப்பகுதியில் இடம்பெற்ற இந்த சுற்றிவளைப்பில் நன்நீர் மீன்பிடித்தல் நடவடிக்கைக்காக தடைசெய்யப்பட்ட சட்டவிரோத மீன்பிடி உபகரணங்களை வைத்திருந்த குற்றத்திற்காக குறித்த இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் 15 இலட்சம் ரூபா பெறுமதியான தடைசெய்யப்பட்ட தங்கூசி வலைகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூர்மை இணையத்தளத்திற்கு சுட்டிக்காட்டினார்.
பெப். 28 14:48

அம்பாந்தோட்டைத் துறைமுகத்தை அமெரிக்கத் தூதுவர் தலைமையிலான குழு பார்வை - பாதுகாப்புக் குறித்து உரையாடல்

(மன்னார், ஈழம்) சீன அரசாங்கத்தின் அனுமதியுடன் சீனாவின் தனியார் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அம்பாந்தோட்டைத் துறைமுகத்தை கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதுவர் அலெய்னா ரெப்லிட்ஸ் தலைமையிலான அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் குழு பார்வையிட்டுள்ளது. நேற்றுப் புதன்கிழமை அம்பாந்தோட்டைக்குச் சென்ற இந்தக் குழு துறைமுகத்தின் அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து அறிந்துகொண்டதாக அமெரிக்கத் தூதரகத் தகவல்கள் கூறுகின்றன. அம்பாந்தோட்டை கடற்படைத் தளத்தின் கட்டளை அதிகாரி அசோக விஜேசிறிவர்த்தனவையும் சந்தித்து பாதுகாப்பு விடயங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
பெப். 28 09:28

பாகிஸ்தானுக்கான விமான சேவைகள் அனைத்தையும் இலங்கை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளது

(யாழ்ப்பாணம், ஈழம் ) இந்தியா, பாகிஸ்தான் நாடுகளிடையே ஏற்பட்டுள்ள பதற்ற நிலையை அடுத்து பாக்கிஸ்தானின் கராச்சி, லகூர் நகரங்களுக்கான விமான சேவைகளை இலங்கை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. இலங்கை விமானப் போக்குவரத்து அமைச்சின் உத்தரவுக்கு இணங்க ஸ்ரீலங்கன் விமான சேவைகள் நிறுவனம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் கடந்த சில நாட்களாக முரண்பட்டுள்ள நிலையில் இரு நாடுகளுக்கிடையிலும் போர் பதற்றமும் ஏற்பட்டுள்ளது. இந்தியா பாகிஸ்தான் எல்லையில் இருதரப்பும், போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்தியதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளன. அத்துடன் பாகிஸ்தான் விமான போக்குவரத்து அதிகார சபை, தமது நாட்டின் வான் பரப்பின் ஊடான விமானப் பயணங்களுக்கு அனுமதியும் மறுத்துள்ளது.
பெப். 28 07:50

இலங்கை இராணுவத்தால் அபகரிக்கப்பட்ட காணிகளை மீட்கும் நோக்கிலான வாகனப் பேரணி யாழ்ப்பாணத்தைச் சென்றடைந்தது

(யாழ்ப்பாணம், ஈழம்) இலங்கை இராணுவத்தினரால் அபகரிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களது பூர்வீக நிலங்களை விடுவிக்குமாறு வலியுறுத்தி தமிழ் மக்கள் முன்னெடுத்துவரும் போராட்டம் குறித்து இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கம் அலட்டிக்கொள்ளாத நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் இலங்கை இராணுவத்தால் அபகரிக்கப்பட்ட கேப்பாபுலவு பிரதேச மக்களின் பூர்வீகக் காணிகளை மீட்டுத்தருமாறு வலியுறுத்தி ஆரம்பிக்கப்பட்டுள்ள கொழும்பு நோக்கிய வாகனப் பேரணி நேற்றுப் புதன்னிழமை யாழ்ப்பாணத்தைச் சென்றடைந்துள்ளது.
பெப். 27 14:09

சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட பல கோரிக்கைளை முன்வைத்து யாழ்ப்பாணத்தில் ஆசிரியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

(யாழ்ப்பாணம், ஈழம்) சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட பல கோரிக்கைளை முன்வைத்து இலங்கை ஆசிரியர் சேவைச் சங்க ஆசிரியர்கள் யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொண்டனர். ஆசிரியர் சங்கத்தின் வடமாகாண கிளையின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் முன்பாக நேற்று செவ்வாய்க்கிழமை மாலை ஆசிரியர்கள் இணைந்து கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டதாக கூர்மையின் யாழ்ப்பாண செய்தியாளர் தெரிவித்தார்.
பெப். 27 10:31

யாழ்.பல்கலைக்கழக தொழிநுட்பபீட மாணவர்களுக்குத் தடை- புதிய மாணவர்களுக்கு பகிடிவதை தீவிரம்

(கிளிநொச்சி, ஈழம்) யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சியில் அமைந்துள்ள தொழிநுட்ப பீடத்தில் பகிடிவதையைத் தொடர்ந்து ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையை அடுத்து தொழிநுட்பபீடத்தின் அனைத்து மாணவர்களும் அறிவியல் நகரில் அமைந்துள்ள யாழ்ப்பாண பல்கலைக்கழக தொழில்நுட்பபீட வளாகம் உட்பட அனைத்துப் பகுதிகளுக்கும் உள்நுழைவதற்குத்தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த திங்கட்கிழமை தொழிநுட்ப பீடத்தின் புதுமுக மாணவர்களை சிரேஷ்ட மாணவர்கள் கடுமையான பகிடிவதைக்கு உட்படுத்தியதாகவும் இந்த விடயம் தொடர்பாக புதுமுக மாணவர்களின் பெற்றோர் பதற்றமடைந்து, பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு அறிவித்துள்ளனர்.
பெப். 26 22:54

ரணிலின் இலங்கை நாடாளுமன்ற உறுப்புரிமையைக் கேள்விக்கு உட்படுத்தும் மனு - மே மாதம் அறிவிப்பு வெளியாகும்

(யாழ்ப்பாணம், ஈழம் ) இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் நாடாளுமன்ற உறுப்புரிமையைக் கேள்விக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட உரிமை வினா பேராணை (Writ of quowarranto) தொடர்பான மனுவை விசாரணைக்கு எடுப்பதா இல்லையா என்பது குறித்து கொழும்பு மேன் முறையீட்டு நீதிமன்றம் எதிர்வரும் மே மாதம் 21 ஆம் திகதி அறிவிக்கவுள்ளது. ஷிரான் குணரத்ன, பிரியந்த பெர்ணான்டோ ஆகிய இரண்டு நீதிபதிகள் இந்த அறிவிப்பை இன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்டனர். அரச நிறுவனங்களுக்கு சேவைகளை வழங்கி, பணம் ஈட்டும் வரையறுக்கப்பட்ட லேக் ஹவுஸ் பிரின்ட்டர்ஸ் அன்ட் பப்ளிஷஸ் தனியார் நிறுவனத்தின் முக்கிய பங்குதாரராக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க செயற்பட்டு வருகின்றார்.
பெப். 26 20:42

ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்தும் பாதுகாப்பு வழங்குமாறும் வலியுறுத்தி யாழ் ஊடக அமையம் அறிக்கை

(யாழ்ப்பாணம், ஈழம்) இலங்கையில் கடந்த காலங்களில் நிலவிய யுத்த காலத்தின் போதும் அதற்குப் பிற்பட்ட காலங்களிலும் இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கத்தில் அங்கம் வகிப்போராலும், இலங்கை இராணுவத்தினராலும், புலனாய்வாளர்களாலும் தமிழ் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள், கடத்தல்கள், காணாமல் ஆக்கப்படுதல் மற்றும் படுகொலை செய்யப்படுதல் போன்ற அட்டூழியங்கள் தொடர்ச்சியாக அரங்கேற்றப்பட்டுவரும் நிலையில், கிளிநொச்சியில் நேற்றுத் திங்கட்கிழமை வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தின் போது ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்தும் ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை அதிகரிக்கக் கோரியும் யாழ் ஊடக அமையம் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளது.
பெப். 26 15:07

இலங்கை இராணுவத்தால் அபகரிக்கப்பட்ட காணிகளை மீட்க வாகனப் பேரணி - கொழும்பில் நிறைவடையும்

(முல்லைத்தீவு, ஈழம்) தமிழர் தாயமான முல்லைத்தீவு மாவட்டத்தில் இலங்கை இராணுவத்தால் அபகரிக்கப்பட்ட கேப்பாபுலவு பிரதேச மக்களின் பூர்வீகக் காணிகளை மீட்டுத்தருமாறு கோரி வாகனப் பேரணி போராட்டம் இன்று செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் காணி உரிமைக்கான மக்கள் ஊர்வலம் என்ற பெயரில் இந்த வாகனப் பேரணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. காணிகளை மீட்பதற்காகத் தொடர்ச்சியாகப் போராட்டம் இடம்பெற்று வரும் இடத்தில் இருந்து ஆரம்பமான இந்த வாகனப் பேரணி, முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தை சென்றடைந்து. மாவட்ட உதவி அரசாங்க அதிபரிடம் மகஜர் கையளிக்கப்பட்டது. மகஜர் கையளிக்கப்படுவதற்கு முன்னதாக ஆர்ப்பாட்டமும் கையெழுத்து போராட்டமும் நடத்தப்பட்டது.
பெப். 26 09:41

இலங்கை அரசாங்கம் ஏமாற்றுகிறது - ஜெனீவா மனித உரிமைச் சபை நடவடிக்கை எடுக்க வேண்டும், விக்னேஸ்வரன்

(கிளிநொச்சி, ஈழம்) பொறுப்புக் கூறல் தொடர்பாக இதுவரை இலங்கை அரசாங்கம் உரிய பதில் வழங்கவில்லை. இதனால் ஐக்கிய நாடுகள் சபையின் ஜெனீவா மனித உரிமைச் சபை கால அவகாசம் வழங்காது கடுமையான தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என தமிழ் மக்கள் கூட்டணியின் பொதுச் செயலாளர், முன்னாள் வடமாகாண சபையின் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கோரியுள்ளார். ஜெனீவா மனித உரிமைச் சபையின் தீர்மானத்தை நிறைவேற்றுவதிலோ, போர்க்குற்ற விசாரணையை நடாத்துவதிலோ இலங்கை அரசாங்கம் அக்கறை செலுத்தவில்லை என்றும் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் நேற்றுத் திங்கட்கிழமை இடம்பெற்ற கவனயீர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.